சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – ஞானவேல் காம்போவில் தயாராகி வரும் வேட்டையன் திரைப்படத்தின் ஷூட்டிங்க்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ப்ரேக் விடப்பட்டுள்ளது. இந்த நல்ல நாளில் ரஜினிகாந்தை சந்திக்க அவரது ரசிகர்கள் வீட்டுக்கு முன் திரண்டனர். இதனால் கடுப்பான ரஜினியின் பக்கத்து வீட்டு பெண் தெருவில் ஆர்பாட்டம் செய்துள்ளார்.
வழக்கமாக ரஜினிகாந்த்தின் பிறந்தநாள், பண்டிகை தினங்களில் போயஸ் கார்டனில் இருக்கும் அவரது இல்லத்திற்கு முன் பல்வேறு ஊர்களில் இருந்து ரசிகர்கள் வருவர். பல சமயங்களில் ரஜினி இல்லை என்றாலும், அவரது வீட்டுக்கு முன் வந்து காத்துக்கிடப்பர்.
இந்தப் பொங்கலுக்கு அவரைச் சந்திக்க வந்த ரசிகர்களை பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். ஒழுக்கத்திலும் சிந்தனையிலும் நேர்மை இருந்தாலே வாழ்க்கையில் நிம்மதி மற்றும் மகிழ்ச்சி இருக்கும். ” என்றார்.
இந்த ரசிகர்களின் வருகை மறுபக்கம் ரஜினியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு தொல்லையாக அமைகிறது. இன்று மிகவும் கடுப்பான பக்கத்து வீட்டு பெண் தெருவில் இறங்கி பத்திரிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேசினார். அந்தப் பெண், “ நாங்களும் தான் வரி செலுத்துகிறோம். நாங்களும் தான் இந்த ஏரியாவில் பல ஆண்டுகளாக இருக்கிறோம். இவருக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் ? ஒவ்வொரு பண்டிகைக்கும் இப்படி கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் திரண்டு வருவது தொல்லையாக இருக்கிறது. இதுக்கு ஒரு முடிவே இல்லையா ” என நியாயம் கேட்டுள்ளார்.
அந்தப் பெண் சொல்வது நிச்சயம் சரி தான். ரஜினி இவ்வாறு அவரது வீட்டிற்க்கு முன் ரசிகர்களை அனுமதிப்பது பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தொந்தரவாக அமைகிறது. வேறு எதாவது இடத்திற்கு (உதாரணமாக மண்டபம், சிட்டிக்கு வெளியே உள்ள வீடு) அவர்களை வரச் சொல்லி அங்கு யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சந்திப்பதே இதற்கு ஒரு நல்ல வழி.