Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாஜெய்லர் படத்தின் சூட்டிங் எப்போது? வெளியானது முக்கிய அப்டேட்

ஜெய்லர் படத்தின் சூட்டிங் எப்போது? வெளியானது முக்கிய அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ஜெய்லர் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் 70 வயதை கடந்தும் தற்போதுள்ள இளம் வீரர்களுக்கு டப் கொடுத்து வசூலை குவித்து வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் கடந்த சில படங்கள் தமிழகத்தில் மட்டும் வசூலில் சரிவை கண்டது. உலகம் முழுவதும் நல்ல வசூல் கிடைத்தாலும் தமிழகத்தில் நடிகர் விஜய், அஜித் போன்ற நடிகர்களின் வசூல் அளவுக்கு ரஜினிகாந்த் படம் வசூல் செய்யவில்லை.

- Advertisement -

இதனை அடுத்து பி மற்றும் சி சென்டர் ரசிகர்களை கவரும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவாவிடம் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தை நடித்தார். கிராம பின்புலம் மற்றும் தங்கச்சி பாசம் என உருவான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவியது. படமும் எதிர்பார்த்த அளவு வசூல் செய்யவில்லை. படம் நாடகம் போல் இருந்ததாக சிலர் விமர்சனம் செய்து கிண்டல் அடித்தனர் .இது ரஜினிகாந்த்க்கும், சிறுத்தை சிவாவுக்கும் தனிப்பட்ட முறையில் பின்னடைவாக இந்த படம் அமைந்தது.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி இயக்குனர் நெல்சன் ரஜினிகாந்திடம் கதை ஒன்றை கூறினார். இது ரஜினிகாந்துக்கு பிடித்துப் போக அடுத்த படம் ரஜினியுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகின. இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

- Advertisement -

இதில் சில காட்சிகள் சர்வதேச அளவில் கேலிக்குள்ளானது. இதனால் அதிருப்தி அடைந்த நடிகர் ரஜினி நெல்சன் படத்திலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் அது உண்மை இல்லை என்று நிரூபிக்கும் வகையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர் அடங்கிய மோஷன் போஸ்டர் வெளியானது. இதில் படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது. பீஸ்ட் திரைக்கதையில் நெல்சன் கோட்டை விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

- Advertisement -

இதனை அடுத்து ஜெயிலர் படத்திற்காக நெல்சன் கவனத்துடன் பணியாற்றி திரைக்கதையை செதுக்கியிருக்கிறார். தற்போது படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள் அனைத்தும் முடிவடைந்து உள்ள நிலையில் ஜெயிலர் திரைப்படத்தை ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க நெல்சன் மற்றும் சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது. சுமார் நான்கு செட்யூல் வரை படத்தை எடுக்க உள்ள நெல்சன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு படத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.

Most Popular