அண்மையில் நடிகர் மன்சூர் அலி கான் லியோ படத்தில் உடன் நடித்த நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் சரியாக விளக்கமும் இன்று கொடுக்கவில்லை. கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் இது பெரிய பிரச்சனையாக போய்க் கொண்டிருக்கிறது.
நடிகர் மன்சூர் அலி கான் எப்போதும் ஒரு விதமாக நக்கலாக எதார்த்தமாக பேசுவார். அவரது பல்வேறு நேர்காணல்கள் மற்றும் வீடியோ காட்சிகள் அதற்க்கு சாட்சி. லியோ படத்தில் தன் கதாபாத்திரம் எதிர்பார்த்தது போல இல்லை என்பதற்காக ஏற்கனவே ஒரு முறை லோகேஷ் கனகராஜை குதிக்காட்டி பேசினார்.
சில தினங்களுக்கு முன்னர் நடிகை திரிஷா பற்றி தவறாகப் பேசியுள்ளார். “ திரிஷா இப்படத்தில் இருப்பதால் எனக்கு வில்லன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு அவரை கட்டிலில் தூக்கிப் போட்டு கற்பழிக்கும் காட்சி இடம்பெறும் என எதிர்பார்த்தேன். ” என்றார். இதற்கு நடிகை திரிஷா மிகவும் கோபப்பட்டு தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
கோலிவுட்டில் முன்னணி நடிகர்கள் இது பற்றி பெரிதாக பேசவில்லை என்றாலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உட்பட சிலர் கடுமையாக கண்டித்தனர். பக்கத்து மாநில நடிகர் சிரஞ்சீவி இன்று தன் ஆதரவை திரிஷா அவர்களுக்கு கொடுத்துள்ளார்.
இன்று காலை இச்சம்பவம் குறித்து மன்சூர் அலி கான் கூறியதாவது, “ நான் திரிஷாவைப் பற்றி சொன்னது படத்தில் தான். சினிமாவில் கொலை செய்வது உண்மையாகிறதா என்ன ? த்ரிஷா என்மேல் இப்போது கோபமாக உள்ளார். அடுத்தப் படத்தில் நாங்கள் ஒன்றாக நடிப்போம். நடிகர் சங்கம் என்னைப் பலி ஆடாக வைத்து நல்ல பெயர் சம்பாரிக்க முயசிக்கிறது. இன்னும் நான்கு மணி நேரத்துக்குள் கண்டன அறிக்கையை திரும்ப பெற வேண்டும். ”
இதெல்லாம் வைத்து ஏன் மன்சூர் அலி கானுக்கு மட்டும் இந்த அளவு அழுத்தம் தருகிறார்கள் ஆனால் முன்னணி நடிகர்கள் விஜய், ரஜினியை எதுவும் சொல்லாமல் இருக்கிறார்கள் எனும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் சினிமா விமர்சகர் பிஸ்மி. “ 12பி படத்தில் அறிமுகமான ஷியாமிடம் நடிகர் விஜய், யாருடா நீ முதல் படத்திலேயே ஜோதிகா, சிம்ரன் என இரண்டு குதிரைகளுடன் வர என பேசியது தரக் குறைவாக தெரியவில்லையா. ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் சமீபத்தில் பெரும் பேசும் பொருளாக அமைந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதைக் குறிப்பிட்டு, “ ஜெயிலர் படத்தின் காவாலா பாட்டில் நடனமாடிய தமன்னாவை பார்த்து அவருடன் என்னை ஆட வைக்கவில்லை என ரஜினி இச்சையாக பேசியுள்ளார். மன்சூர் அலிகான் பாணியில் தான் ரஜினியும் பேசியிருப்பார். ஆனால் அன்று யாரும் பெரிய சிக்கலாக அதனை மாற்றவில்லை. ” என பிஸ்மி யூடியூப்பில் பேசியுள்ளார்.