சினிமா

ஜெய்லர் படத்திற்க்காக டெல்லி சென்ற ரஜினிகாந்த்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

திரை உலகில் எத்தனையோ நடிகர்கள் நடிக்க தொடங்கிய காலத்தில் பெரும் பேரோடும் புகழோடும் இருந்து பின் குறுகிய காலத்திலே இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் விடுவார்கள். ஆனால் தான் நடிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை சூப்பர் ஸ்டார் என்றாலே அது ரஜினிகாந்த் தான் என்ற அளவிற்கு நீங்கா இடம் பிடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இளம் வயதில் அவர் எவ்வாறு துடிப்போடு நடித்தாரோ அதேபோன்று இப்பொழுது வரும் படங்களிலும் தனது ஸ்டைலிலும் ஆக்ஷனிலும் எந்த குறையும் இல்லை தனது 71 வது வயதிலும் அவர் சற்றும் அசராது ஆக்சன் ஃபிலிம் களின் நடித்து வருகிறார்.

Advertisement

சன் பிக்சர் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான பேட்ட எந்திரன் போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதை அடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் டாக்டர், பீஸ்ட் போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் தற்பொழுது ரஜினிகாந்த் நடித்த வரும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர் நிறுவனம் ஜெய்லர் திரைப்படத்தை பிரம்மாண்டமாக
தயார் செய்து வருகிறது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்துக்கு ஜெயிலர் 169 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் உடன் இணைந்து கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் , எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ஐஸ்வர்யா ராய் ,யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் முதன்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளனர்.

Advertisement

ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக் ஓவர் செய்த ஆலிம் ஹக்கீம் என்பவர்தான் ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மேக்கப் செய்வதற்கு ஒப்பந்தமிட்டு இருக்கிறார். மேலும் ஜெயிலர் திரைப்படம் எடுப்பதற்காக ஹைதராபாத்தில் செட்டிங் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஜெயிலர் திரைப்படத்திற்கான ஷூட்டிங் முதலில் சென்னையில் நடக்க இருப்பதாக தகவல் வந்தது .

இந்நிலையில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்திற்கான சூட்டிங் டெல்லியில் நடப்பதாகவும் ,அதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது டெல்லி சென்றிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. டெல்லியில் 10 நாட்கள் ஷூட்டிங் முடிந்த பிறகு மீண்டும் சென்னை வந்து சென்னையில் ஜெயிலர் திரைப்படத்திற்கான ஷூட்டிங்கில் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் துவங்கி காரைக்கால் கடல் பகுதி வரை படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கான சூட்டிங் நடக்கத் தொடங்கியது என்று அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியாக செய்த திரைப்படத்தை வரவேற்று காத்திருக்கிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top