தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தாம் நடிக்கும் படத்தை எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுக்கும் நடிகராக வலம் வந்தவர் சசிகுமார். சுப்பிரமணியபுரம் படத்தில் இயக்குனர் மற்றும் நடிகருமாக அறிமுகம் ஆகி பல்வேறு ஹிட் படங்களை கொடுத்தவர். எனினும் அண்மைக்காலமாக நடிகர் சசிகுமார் திரைப்படங்கள் படுதோல்வியை தந்தது.
சசிகுமார் படம் திரையரங்கில் வந்ததா என்று கூட தெரியாத அளவிற்கு அவருடைய மார்க்கெட் சரிந்து விட்டது. இந்த நிலையில் தான் அவர் நடித்த அயோத்தி திரைப்படம் திரைக்கு வந்தது. எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் ரிலீஸ் ஆன இந்த திரைப்படத்தை ரசிகர்ககே விளம்பரப்படுத்தி படத்தை வெற்றி படமாக ஆக்கினார்கள்.
பல்வேறு திரைவிமர்சகர்களும் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்டுகளை வழங்கினார்கள். இதனால் அயோத்தி திரைப்படம் திரைப்படமாக அமைந்தது சசிகுமார் திரைப்பட வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸை அது ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் அயோத்தி படம் ஜி 5 ஆப்பில் ரிலீசானது. இதனை பார்த்து பல ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார்.
நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம்.
முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி.தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும் என்று கூறியுள்ளார்.
இந்த வாழ்த்துக்கு பதில் அளித்துள்ள நடிகர் சசிகுமார்
நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது. மிக்க நன்றி சார் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இருவரும் இணைந்து பேட்ட படத்தில் நடித்திருந்ததால் இன்னும் நண்பர்களாக இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.