Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாராஜ்கிரன் மகள் வாழ்வில் இப்படி ஒரு சோகமா தந்தை ராஜ்கிரனிடம் வீடியோவில் கதறிய மகள்

ராஜ்கிரன் மகள் வாழ்வில் இப்படி ஒரு சோகமா தந்தை ராஜ்கிரனிடம் வீடியோவில் கதறிய மகள்

பிரபல நடிகர் ராஜ்கிரனின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா. இவர் தொடர் இயக்குனர் திருமுருகனின் இயக்கத்தில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற தொடரில் நடித்திருந்தார். இது சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.

- Advertisement -

அதே தொடரில் சம்பந்தம் என்ற கதாபாத்திரத்தில் வந்த முனீஸ்ராஜை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.

இவருடைய இந்த செயல் பிடிக்காத ராஜ்கிரன் பிரியா என்று எனக்கு ஒரு மகளை இல்லை என்று இணையத்தில் பதிவிட்டு இருந்தார் .அதன் பிறகு தற்பொழுது ராஜ்கிரனின் வளர்ப்பு மகளான ஜீனத் பிரியா ஒரு காணொளியை தற்பொழுது இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

- Advertisement -

நான் ராஜ்கிரனின் வளர்ப்பு மகள் பிரியா. நான் முனீஸ் ராஜாவை காதல் திருமணம் செய்து கொண்டது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். என் வளர்ப்பு தந்தையின் பேச்சை கேட்காமல் நான் செய்தது தவறுதான். எனக்கும் முனீஸ் ராஜாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்பொழுது பிரிந்து விட்டோம். இரண்டு மாதங்களாக பிரிந்து தான் வாழ்ந்து வருகிறோம். வளர்ப்பு தந்தைக்கு துரோகம் செய்த பொழுதும் என்னுடைய பிரச்சனைக்காக ஓடிவந்து உதவினார்.

- Advertisement -

நான் இது எதிர்பாராத கருணையாகும். நான் அவரிடம் எவ்வளவு மன்னிப்பு கேட்டாலும் அது மிகையாகாது. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா என்று உருக்கமான பதிவை பதிவிட்டு இருக்கிறார் பிரியா.

இந்த காணொளி தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது. இதுபோன்ற எத்தனையோ பெண்கள் தந்தையின் பேச்சு கேட்காமல் தவறான முடிவுகளை எடுத்து வாழ்க்கையில் அவதிப்படுகிறார்கள் .அது போன்றவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய முன்னுதாரணமாக அமையும் என்றும் பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.

Most Popular