Wednesday, April 24, 2024
- Advertisement -
Homeசினிமா“ விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்புகிறேன்.. ! காரணம்... ” - ராம்...

“ விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்புகிறேன்.. ! காரணம்… ” – ராம் சரண் விருப்பம்..!

தெலுங்கு மொழியில் டாப் டயர் நடிகர்களில் ஒருவர் ராம் சரண். கடந்த ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஷ்ரேயா உள்ளிட்டோர் நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உலகெங்கும் பல்வேறு சாதனைகள் படைத்து. 900 கோடிகளுக்கு நிகராவும் வசூல் செய்தது. அது மட்டுமில்லாமல் உயரிய விருதுகளையும் ஜேம்ஸ் கேமிரோன் உள்ளிட்ட சில ஜாம்பவான் இயக்குனர்களின் பாராட்டுகளையும் பெற்றது.

- Advertisement -

அண்மையில் லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்ற 95வது ஆஸ்கார் விருதில் சிறந்த பாடலுக்கான விருதை ‘ நாட்டு நாட்டு ’ பாடல் தட்டிச் சென்று இந்திய மண்ணிற்கு பெருமையை ஊட்டியுள்ளது. கீரவாணியின் தரமான இசையும் ராம் சரண் மற்றும் என்.டி.ஆரின் இடைவேளையில்லா நடனமும் பாட்டை உயர்த்துது.

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆஸ்கார் வென்றப் பின் பல்வேறு பேட்டி மற்றும் நேர்காணலில் ஈடுபட்டது படக்குழு. சமீபத்தில் இந்தியா டுடே நேர்காணலில் கலந்து கொண்ட ராம் சரணிடம் “ எதிர்காலத்தில் நீங்கள் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் எது ? ” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ விளையாட்டு சம்மந்தமான கதாபாத்திரத்தில் நடிப்பதே எனது நீண்ட நாள் ஆசை. ” என தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

- Advertisement -

உடனே தொகுப்பாளார், “ பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பீர்களா ? ” எனக் கேட்க, ராம் சரண் “ நிச்சயம் நடிப்பேன். ” என பதிலளித்தார். மேலும், “ எனது முகமும் உடல் தோற்றமும் ஓரளவு விராட் கோலியைப் போலவே இருப்பதால் சரியாக இருக்கும். வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். ” என்றார் ராம் சரண்.

- Advertisement -

நடப்பில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு விராட் கோலிக்கு மட்டுமே இருக்கிறது. இந்திய அணிக்காக எவ்வளவு ரன்கள் ! எவ்வளவு சாதனைகள் ! இவரின் வாழ்க்கை வரலாறு நிச்சயம் படமாக்கப்படும். ஒருவேளை ராம் சரணால் நடிக்க இயலவில்லை எனில் சிலம்பரசன் நடித்தால் பொருத்தமாக இருக்கும். தற்போது சிம்பு உடல் எடையைக் குறைத்து காட்டுப் பசியில் கிடக்கிறார். அவர் நடித்தால் கூட தரமாக இருக்கும்.

Most Popular