சினிமா

இவ்வளவு திமீர் ஆகாது.. ரசிகருடன் அ நாகரிகமாக நடந்து கொண்ட ரன்பீர் கபூர்

சினிமா துறையை பொறுத்தவரை நடிகர் நடிகைகள் வாங்கும் சம்பளத்தை விட அவர்களை அடுத்த தரத்திற்கு உயர்த்தி செல்வது  ரசிகர்களுடைய அன்பு மட்டும் தான். ஒரு நடிகன் ஒரு பெரிய நடிகனாக ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் ரசிகர்கள் தான். ஒரு நடிகனை ஒரு மனித ரசிக்க தொடங்கிய அவனுக்கு ரசிகன் ஆகிவிட்டால் அவனுக்கு எந்தவித ஆதாயமுமே இல்லாமலே அவனைப் புகழ்ந்து புகழ்ந்து அவனை பெரிய இடத்திற்கு கொண்டு செல்கிறான். முகம் தெரியாமலேயே நடிகர்களின் வளர்ச்சிக்கு தன்னுடைய ரசிகர்கள் தான் காரணமாகிறார்கள்.

Advertisement

இந்த உண்மையை எத்தனை நடிகர்கள் உணர்ந்து இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அப்படி உணர்ந்த சில நடிகர்கள் அந்த ரசிகர்களை தன் குடும்பத்தாரை போல கொண்டாடி இன்னும் உயர்ந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்படி உயர்வதற்கும் ரசிகர்களைத்தான் அவர்கள் படிக்கட்டுகளாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். உதாரணமாக தளபதி விஜய், அஜித் ,சூர்யா போன்றோர் ரசிகர்களிடம் பெரும் அளவில் கண்ணியத்துடன் நடந்து கொள்வார்கள்.

இந்த குணமே இன்று அவர் தமிழ் சினிமாவிலேயே மிகப்பெரும் இடத்தைக் கொண்ட நடிகராக இருந்து வருகிறார்கள். இதை போன்று இன்னும் சில நடிகர்களும் இருக்கிறார்கள். இது ஒரு புறம் பெருமையாக இருந்தாலும் ரசிகர்களை ஒரு பொருட்டாக கூட மதிக்காத பல நடிகர்களும் சினிமா துறையில் இருந்து வருகிறார்கள்.

Advertisement

பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ரன்பீர் கபூர் தன் ரசிகருடன் நடந்து கொண்ட ஒரு காட்சி தற்பொழுது இணையதளங்களில் பதிவாகியுள்ளது. ரன்பீர் கபூரை பார்க்க அலை மோதும் ரசிகர் கூட்டத்தின் நடுவே ஒருவரை அழைத்து செல்பி எடுக்க அனுமதிக்கிறார். பின் செல்பி எடுத்த பிறகு அவரிடம் இருந்து அந்த அலைபேசியை வாங்கி கர்வத்தோடும் திமிரோடும் கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல் அந்த அலைபேசியை தன் முதுகு புறமாக தூக்கி எரிகிறார். இதைப் பார்ப்பதற்கு இப்படி ஒரு தலைகாணத்தோடு ஒரு நடிகர் நடந்து கொள்வதா? இவரையா நாம் ரசித்துக் கொண்டிருந்தோம் என்று பல ரசிகர்களிடம் கேள்வி எழும்புகிறது.

ஆனால் இவருடைய தாத்தா ராஜ்கபூர் இவருடைய தந்தை ரிஷி கபூர் தாயார்  ஆகிய அனைவருமே சினிமா துறையில் இருந்து உயர்ந்தவர்கள் தான். இப்படி மூன்று தலைமுறையாக சினிமா துறையை சார்ந்த குடும்பத்தில் இருந்து வந்த ரன்பீர் கபூர் ரசிகர்களை இப்படி அவமதித்திருக்க மாட்டார். இதை பார்ப்பதற்கு ஒரு விளம்பர காட்சி போன்று தெரிகிறது. இது ஒரு விளம்பர படப்பிடிப்பிற்கான காட்சியாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசி வருகிறார்கள். இந்தக் காட்சி பார்ப்பதற்கு ஒரு புறம் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் இன்னொரு புறம் இது அவருடைய இயல்பாக இருக்காது என்றும் அவருடைய ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top