சினிமா

சமந்தாவை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தானா.. எப்படி தெரியுமா?

ஒரு காலத்தில் சினிமா உலகில் கதாநாயகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள். கதாநாயகிகளை வெறும் காதல் காட்சிகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு புகைப்படங்களை எடுத்தார்கள். மேலும் அவர்களுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்களும் இல்லை. அதேபோல் அவர்களுக்கு கதாநாயகர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் போன்று கொடுக்கப்படவில்லை. அதைவிட குறைவாகத்தான் வாங்கிக் கொண்டு இருந்தார்கள்.

Advertisement

மொத்த உலகிலுமே அன்றைய கால பெண்கள் சற்று பொருட்படுத்தப்படாமல் தான் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இன்று ஒட்டுமொத்தமாகவே பெண்களுக்கு எல்லா இடத்திலும் ஒரு தனி அங்கீகாரம் கிடைத்தது போன்று சினிமா உலகிலும் கிடைத்துள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக தான் நடிகைகளை மட்டுமே முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து இன்று பல படங்களை இயக்கி வெற்றியடைய செய்கிறார்கள். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் பலவிதமான படங்களை எடுத்து வருகிறார்கள் .

இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நயன்தாராவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்து ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறார். நடிகையர் திலகம் திரைப்படத்திற்கு பிறகு நடிகை கீர்த்தி சுரேஷின் மக்கள் செல்வி என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படியாக திரை உலகில் நடிகர்கள் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்கள். இதற்கு முழு காரணமும் ஆண்களுக்கு நிகரான அவர்களின் உழைப்புதான்.

Advertisement

இன்றைய காலங்களில் ஒரு நடிகரோ நடிகையோ முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதை இணையதளங்களின் மூலமாகத்தான் வெளியுலகம் அறிந்து கொள்கிறது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் என்று சொல்லப்படும் ஒரு சமூக வலைத்தளத்தில் இதுவரை முன்னிலையில் இருந்தது நடிகை சமந்தா. இவர் ஆரம்ப காலத்தில் சற்று குறைவான அளவிலேயே ரசிகர்களால் ரசிக்கப்பட்டாலும் தற்பொழுது ஒரு முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருகிறார்.

இவருக்கு இன்ஸ்டாகிராமில் 24. 3 மில்லியன் பாலோவர்சை கொண்டு முதல் இடத்தில் இருந்தார்.ஆனால் தற்பொழுது தமிழ், தெலுங்கு , மலையாளம் , ஹிந்தி என்ற நான்கு மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்ற புஷ்பா திரைப்படத்தின் கதாநாயகியான நடிகை ராஷ்மிகா மந்தானா 32.7 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை கொண்டு முதலிடத்தை பிடித்துள்ளார். தற்பொழுது தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உடன் வாரிசு திரைப்படத்தின் கதாநாயகி ஆக நடித்து வருகிறார். இதனால் தற்பொழுது நடிக்கை சமந்தா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top