சினிமா

லியோ படத்தில் சந்தனம் ? டிவிட்டரில் ரத்னகுமார் கொடுத்துள்ள குறிப்பு.. ! உற்சாகத்தில் ரசிகர்கள்.. !

Rathna kumar santhanam coolers tweet

விஜய் – லோகேஷ் கனகராஜ் இரண்டாவதாக இணையும் படத்தின் எதிர்பார்ப்புகளை வார்த்தைகளால் விளக்கி விட முடியாது. வாரிசு படத்தின் ஷூட்டிங் போதே ரசிகர்கள் “ தளபதி 67 அப்டேட் தளபதி 67 அப்டேட் ” என லோகேஷ் எங்கு சென்றாலும் அவரைத் துரத்திச் சென்று நச்சரித்தனர். ஒருவழியாக தளபதி 67 படக்குழுவினரின் ஜனவரி இறுதியில் அதை வழங்கினார்.

லியோ எனத் தலைப்பிடப்பட்டுள்ள படத்தின் புரோமோ வீடியோ ஒன்றும் அடுத்த வாரம் வெளியானது. படத்தின் கேஸ்ட், பூஜை வீடியோ என படக்குழு வைத்திருக்கும் அனைத்தையும் கொடுத்துவிட்டனர். லியோ படத்தின் புரோமோவைப் பார்க்கையில் ‘ தி ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் ’ படத்தின் ரீமேக்கென வெளியான செய்திகள் உண்மை என்றே தெரிகிறது. ஆனால் படக்குழு அதிகாரபூர்வமாக இன்னும் அதை அறிவிக்கவில்லை.

Advertisement

அதே போல் படத்தின் லைட்டிலுக்கு கீழ் எல்.சி.யூ என போடாததால் இப்படம் லோகேஷ் கனகராஜின் தனி படம் என எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதே சமயம் பெரிய பட்ஜெட் படமென்பதால் அதை ரிலீசுக்கு முன்னர் கூறலாம் என திட்டமிட்டு படக்குழு அதை சர்ப்ரைஸாக கூட வைத்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

விக்ரம் படத்தில் கூட ரோலக்ஸாக வரும் சூர்யா மிகப் பெரிய சர்ப்ரைஸாக திகழ வேண்டியவர் தான். எப்படியோ அவரது புகைப்படங்கள்/வீடியோக்கள் முன்னரே லீக் ஆகிவிட்டது, இருப்பினும் அந்தக் கிளைமாக்ஸ்க்கு திரையரங்கே அதிரியது.

Advertisement

விக்ரம் படத்தின் இறுதியில் இறந்து போகும் சந்தனம் (விஜய் சேதுபதி) லியோ படத்தில் வந்தால் எப்படி இருக்கும் ? நினைத்துப் பாருங்கள் ! லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர் மற்றும் படத்தின் துணை எழுத்தாளரான ரத்னகுமார் தன் டிவிட்டர் பக்கத்தில் “ நெவர் சே டை ” எனப் பதிவிட்டு உடைந்த கண்ணாடியை பார்ப்பது போல் பதிவிட்டிருந்தார்.

உடனே உற்சாகத்தில் ரசிகர்கள், இது விக்ரம் படத்தில் சந்தனம் பயன்படுத்திய கண்ணாடி என அவர்களே ஓர் கோட்பாட்டை உருவாக்க ஆரம்பித்துவிட்டனர். இதில் உற்றுக் நோக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ரத்தனகுமார் உடைந்த கண்ணாடியின் ஒரு பகுதியை மட்டுமே கையில் வைத்திருந்தார். விக்ரம் படத்திலும் அதே நிறத்தில் விஜய் சேதுபதி தன் கண்ணாடியின் ஒரு துண்டை உடைதிருப்பார். ஒருவேளை மாஸ்டர் படத்திற்கு பின் எல்.சி.யூவிலும் இவர்களது மோதல் இருக்கும் போல. காத்திருப்போம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top