தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு மற்றும் விநியோகஸ்தர் நிறுவனமாக இயங்கி வருகிறது ரெட் ஜெயின்ஸ் நிறுவனம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் எந்த பெரிய படம் வந்தாலும் அதனை ரெட் ஜெய்ன்ட்ஸ் நிறுவனம் தான் வெளியிடுகிறது. எனினும் கடந்த காலங்களில் உள்ள தவறை கலையும் விதமாக 100% வெளிப்பாடான தன்மை, கிடைக்கும் வருமானம் சரியாக பகிரப்படுவது என அனைத்திலும் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றினார்.
உதயநிதி ஸ்டாலின் நேர்மையாக நடப்பதாகவும் அவர் மூலம் தமிழ் சினிமா மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக நடிகர் கமல்ஹாசனே பாராட்டியது இதற்கு எடுத்துக்காட்டு. இதனால் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் பல படங்களை வாங்கி வெளியிட்டாலும் எவ்வித விமர்சனம் ஏற்படாமல் இருந்தது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சர் ஆனதால் ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனத்தை பணியை பார்க்கவில்லை. இந்த சமயத்தில் தான் துணிவு திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டது.
இதில் வாரிசு திரைப்படத்தை விட துணிவு திரைப்படத்திற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளை ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்து விட்டது. இதன் காரணமாக குறைவான திரையரங்குகளில் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஆனால் குடும்ப ரசிகர்கள் அதிக அளவில் வாரிசு திரைப்படத்திற்கு வந்தும் சில ஏரியாக்களில் திரையரங்குகள் கிடைக்காமல் இருந்தது.இதற்கு பல திரையரங்கு உரிமையாளர்களும் வெளிப்படையாக ரெட் ஜெய்ண்ட்ஸ் இடம் போட்ட ஒப்பந்தம் தான் காரணம் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.
இது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது உதயநிதி ஸ்டாலின் கட்டமைத்த நல்ல பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இருந்ததால் தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு பிறகு திரைப்பட விநியோகஸ்தர் பணியில் இருந்து சிறிது காலம் பிரேக் எடுக்க ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதன்படி வரும் ஏப்ரலுக்கு பிறகு எந்த திரைப்படத்தையும் சில காலம் வெளியிடாமல் இருக்க உள்ளனர். ரெட் ஜென்ஸின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.