Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாசீரியலில் கூட அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொல்கிறார்கள்.. விஜய் டிவி தொடர் நடிகை பேட்டி..!

சீரியலில் கூட அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொல்கிறார்கள்.. விஜய் டிவி தொடர் நடிகை பேட்டி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சக்திவேல் என்ற புதிய தொடரில் துணை கதாபாத்திரமாக நடித்திருப்பவர் நடிகை ரேஷ்மா பிரசாத் .இவர் இதற்கு முன்பு நிறைய வெப் சீரியஸ்களில் பிரபலமான நடிகையாக நடித்திருந்தார்.

- Advertisement -

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பாரதி கண்ணம்மா தொடரின் இரண்டாவது பாகத்தின் மூலம் சின்ன திரைக்கு அறிமுகமானார் நடிகை ரேஷ்மா பிரசாந்த். இவருடைய எதார்த்தமான நடிப்பும் இவர்  பேசும் ஸ்டைலும் வித்தியாசமாக இருப்பதால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் குறைந்த நாட்களிலேயே கிடைத்தது .மேலும் இவரை வெப் சீரியஸ்களில் இருந்து ரசிப்பவர்களும் அதிகம்.

இவர் தற்பொழுது சின்னத்திரையில் பிரபலமாகி வரும் நிலையில் நிறைய பேட்டிகளில் பேசி வருகிறார் .சில நாட்களுக்கு முன்பு கலாட்டா பிங்க் என்ற சேனலுக்கு அளித்த பேட்டியில் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி வெளிப்படையாக பேசியது வைரலாகி வருகிறது.

- Advertisement -

நடிகை ரேஷ்மா பிரசாந்த் இப்பொழுதெல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் ரொம்ப சாதாரணமாக ஆகிவிட்டது யாரும் அவர்களின் திறமையை பார்ப்பதில்லை முதல் கேள்வியாகவே அட்ஜஸ்ட்மென்ட் இருக்கும் ஓகேவா என்று வெளிப்படையாகவே கேட்டு விடுகிறார்கள்.

- Advertisement -

ஒரு ஆடிஷனுக்காக ப்ரொபைல் கிரியேட் செய்து அனுப்பினேன் அதில் அட்ஜஸ்ட்மென்ட்க்கு  yes or no என்ற ஆப்ஷனையே வைத்திருக்கிறார்கள். நான் நோ என்று போட்டும் எனக்கு கால் செய்து ஓகேவா என்று கேட்கிறார்கள். நான் அவர் முகத்தில் அடித்தது போல் நோ என்று போட்டு இருக்கிறேன் அப்பவும் ஓகேவா என்று கேட்கிறீர்கள் என்று கேட்டு விட்டேன்.

மேலும் செல்லும் இடங்களுக்கு எல்லாம் நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டால் பிரபலமாகிவிடலாம் .ஒத்துக் கொண்டால் உங்களுக்கு நிறை வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறினார்கள். நான் போங்கடா வரும்போது வரட்டும் என்று ஆடிஷன் செல்வதையே நிறுத்தி விட்டேன்.

ஆரம்ப காலத்திலேயே சினிமாவை பொறுத்தவரை பெண்களுக்கு இந்த பிரச்சனை இருப்பது புதிதல்ல. ஆனால் தற்பொழுதெல்லாம் இதை மிகவும் ஓப்பன் ஆகவே கேட்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது நம் கலாச்சாரத்தை கெடுக்கிறது .

இது போன்று எத்தனையோ நடிகைகள் அவர்கள் கடந்து வந்த பாதையில் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி அவர்கள் நிறைய பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இருப்பினும் ரேஷ்மா ப்ரொபைலில் ஆப்ஷனாகவே இதை எல்லாம் வைத்து விட்டார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Most Popular