Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாரிச்சர்ட் ரிஷி - யாஷிக்கா ஆனந்த் காதல் வதந்தியா.. ? பொய் என்றால் ஏன் நெருக்கமான...

ரிச்சர்ட் ரிஷி – யாஷிக்கா ஆனந்த் காதல் வதந்தியா.. ? பொய் என்றால் ஏன் நெருக்கமான படங்களை பகிர வேண்டும்.. ? ரிச்சர்ட் ரிஷி விளக்கம்

திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற 25க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்தவர் ரிச்சர்ட் ரிஷி. இவர் அஜித்தின் மைத்தினரும் ஆவார். அண்மையில் இவரும் இளம் நடிகை யாஷிக்கா ஆனந்தும் காதலித்து வருவதாக பலர் சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பினர். அதற்கேற்றவாறு இருவரும் புகைப்படங்களும் பகிர்ந்தனர்.

- Advertisement -

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் யாஷிக்கா ஆனந்த். துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமாகி 15 படத்திற்கு மேல் நடித்துள்ளார். அதோடு கவர்ச்சியான படங்கள் மூலம் இன்ஸ்டாகிராமில் மாடலாக செயல்படுபவர் யாஷிக்கா.

சில தினங்களாக ரிச்சர்ட் ரிஷியும் யாஷிக்கா ஆனந்தும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் ரிச்சர்ட் ரிஷி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். ஒன்றாக இருக்கும் படத்தைப் பார்த்தாலே பல வதந்திகளை பரப்பும் சமுதாயத்தில் இருவரும் நெருக்கமான படங்களை ஷேர் செய்தனர்.

- Advertisement -

இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு முத்தமிடும் படங்களைக் கண்ட நெட்டிசன்கள் இவர்கள் காதலர்களே என தீர்மானித்து செய்திகளும் பரவின. அதே சமயம் 40 வயதிற்கு மேல் ஆகும் ரிச்சர்ட்க்கும் 23 வயதே ஆகும் யாஷிக்கா ஆனந்தும் எப்படி என்றும் சிலர் பேசினர். காதலுக்கு வயது தடையல்ல என்றாலும் சிலருக்கு இந்த கேள்வி எழும்பியது.

- Advertisement -

இந்த செய்திகள் அனைத்தையும் யாஷிக்காவின் தாயார் மறுத்துள்ளார். காதலர்கள் என்பது வெறும் வதந்தி என மறுத்து அது அவர்கள்து படத்தின் காட்சிகள் எனக் கூறியுள்ளார். இது குறித்து நடிகர் ரிச்சர்ட் ரிஷியும் பேட்டி அளித்துள்ளார். அவரும் இந்த வதந்திகளை எல்லாம் மறுத்துள்ளார்.

அவர் கூறியதாவது, “ நானும் யாஷிக்கா ஆனந்தும் தற்போது நடித்து வரும் படத்தின் பெயர் சில நொடிகள். அந்தப் படத்தின் புகைப்படங்கள் தான் அது. புரொமோஷனுக்காக மட்டுமே பகிர்ந்தேனே தவிர மற்றபடி எங்களுக்கு இடையே காதல் இல்லை. நான் வெளியூரில் இருந்ததால் இந்த செய்திகளுக்கு என்னால் விரைவில் பதிலளிக்க இயலவில்லை. ” என்றார் ரிச்சர்ட் ரிஷி.

Most Popular