நடிகர் கமல்ஹாசனின் திரைப்படங்கள் அனைத்தும் தற்போது விஜய் டிவியில் தான் வருகிறது. விஜய் டிவி நடிகர் கமலை தங்களுடைய கம்பெனி ஆர்ட்டிஸ்ட் போல் பயன்படுத்தி வருகிறது. மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் சன் டிவியை விட்டு ஏன் விஜய் டிவி பக்கம் திரும்பினார் என்ற சந்தேகம் அனைவருக்குமே இருந்திருக்கும். வெறும் சன் டிவியில் ரஜினி,விஜய் ஆகியோரை போற்றும் நிலையில் கமலை மட்டும் ஏன் கொண்டாடவில்லை என்று சந்தேகத்திற்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது.
ஒரு காலத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான டாப் 10 மூவிஸ் பிரசித்தி பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நம்பர் ஒன் இடத்தை எந்தப் படம் பிடிக்கிறதோ அது மிகப்பெரிய கௌரவமாக அந்தக் காலத்தில் கருத்தப்படும்.இந்த நிலையில் தெனாலி திரைப்படத்திற்கு சன் டிவியின் டாப் டென் மூவிஸ் நம்பர் இரண்டாவது இடத்தை வழங்கியிருக்கிறது.
ஆனால் அந்த காலகட்டத்தில் தெனாலி திரைப்படம் தான் வசூலிலும் விமர்சனத்திலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்தது. இந்த நிலையில் இது கமலஹாசனை கடுப்பில் ஆழ்த்தியது.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பட விளம்பரத்தில் சன் டிவியை கலாய்க்கும் வகையில் தெனாலி விளம்பரம் ஒன்று வெளியாகியிருந்தது.
அதில் நடிகர் ஜெயராம்,கமலை பார்த்து என்ன தெனாலி?ராஜ்,ஜெயா, விஜய் டிவியில் எல்லாம் நம்பர் ஒன் இடத்தில் வர. ஆனால் சன் டிவியில் மட்டும் நம்பர் இரண்டாவது இடத்தில் போடுகிறார்கள் என கேள்வி கேட்பது போல் அதற்கு கமல்ஹாசன் அது படத்தில் வரும் காட்சியில் ராஜ் டிவியில் பேட்டி வர மாதிரி காண்பித்திருக்கும் அல்லவா?
அதான் சன் டிவியில் கடுப்பு இதெல்லாம் சகஜம் தொழில் பொறாம மக்கள் மத்தியில் நாம தான் பா நம்பர் ஒன் தியேட்டர் கலெக்ஷன் வச்சு தான் சொல்றேன் என்று விளம்பரம் வந்திருக்கிறது. இதுதான் பிரச்சனைக்கு ஆரம்ப காலமாக இருந்திருக்கிறது.
பின் விருமாண்டி போன்ற திரைப்படங்கள் மூலம் கமலை சமாதானப்படுத்த முயற்சியில் சன் டிவி ஈடுபட்டிருக்கிறது. எனினும் தற்போது சன் டிவி விட்டு முற்றிலும் விலகி நடிகர் கமல் விஜய் டிவியுடன் வந்து சேர்ந்து விட்டார்.