சினிமா

ரோபோ ஷங்கரா இது.. ? என்னதான் ஆச்சு எதேனும் நோயா.. ? விளக்கம் கொடுத்துள்ள அவரது மனைவி

Robo Shankar weight loss

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் விஜயகாந்தின் தர்ம சக்கரம் படத்தில் ஜூனியர் ஆட்டிஸ்ட்டாக சினிமா வாழ்க்கையை துவங்கினார் ரோபோ ஷங்கர். அதன் பின்னர் பல திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும் விஜய் டியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாகவே மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

அங்கிருந்து அவரது சினிமா கேரியர் வளரத் துவங்கியது. நகைச்சுவையான உடல் மொழியின் மூலம் காமெடியில் கலக்கினார். கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு அவரின் இருப்பு இடம் தெரியாமல் போய்விட்டது. கடைசியாக அவர் கோப்ரா, லெஜன்ட் படங்களில் நடித்தார். ஆனால் அதில் பெரிதான கதாபாத்திரம் அவருக்கு கிடையாது.

Advertisement

அண்மையில் ரோபோ ஷங்கர் மெலிதாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. வழக்கமாக சற்று குண்டாக காணப்படும் ரோபோ ஷங்கரை மிகவும் மெலிதாக பார்த்த ரசிகர்கள், அவருக்கு உடலில் எதோ பிரச்சனை இருக்கிறதா என்ற கேள்விகளை எழுப்பினர்.

அனைத்து குழப்பங்களுக்கும் அவரின் மனைவி பிரியங்கா ஷங்கர் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, “ நீங்கள் நினைப்பது போல் என் கணவருக்கு எந்த நோயும் கிடையாது. திரைப்பட கதாபாத்திரத்திற்காக அவர் தன் எடையைக் குறித்துள்ளார். இருப்பினும் அவர் நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை செய்ததில் மகிழ்ச்சி. ” என்றார்.

Advertisement

இனி உடல் எடை குறைந்த ரோபோ ஷங்கரை பல திரைப்படங்களில் காணலாம். பழையது போல நல்ல நகைச்சுவைகளை தூவி நம்மை சிரிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து அவர் செய்யயும் படத்தின் பெயரை யாரும் இன்னும் குறிப்பிடவில்லை என்னது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top