Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாஹன்சிகா காலை தடவ கேட்டேன்.. ரோபோ சங்கர் சர்ச்சை பேச்சு! படக்குழு கண்டனம்

ஹன்சிகா காலை தடவ கேட்டேன்.. ரோபோ சங்கர் சர்ச்சை பேச்சு! படக்குழு கண்டனம்

தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பூ என்று அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா. கொழுக்கு முழுக்கு என்று அமுல் பேபி போல் இருக்கும் ஹன்சிகா. தற்போது ஆதியுடன் இணைந்து பார்ட்னர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

- Advertisement -

இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரோபோ சங்கர் மேடைகள் பேசிய பேச்சு தான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது
இந்தப் படத்தில் காட்சி ஒன்று நான் மேஜைக்கு கீழே ஒரு பொருளை தேட வேண்டும். அப்போது அந்த பொருளை தேடுவதற்காக ஹன்சிகாவின் காலை நான் தடவ வேண்டும் .

இந்த காட்சி நகைச்சுவைக்காக வைக்கப்பட்டது.  இந்த காட்சியை எடுக்க ஹன்சிகா ஒப்புக்கொள்ளவில்லை. நான் ஹன்சிகா காலை தடவிக் கொள்ள கெஞ்சினேன். ஆனால் அவர் அதற்கு அனுமதிக்கவில்லை. அந்த கட்டை விரல்களாவது நான் தொட்டு தடவிக் கொள்கிறேன் என்று கேட்டேன்.

- Advertisement -

நான் மட்டுமல்ல இயக்குனரும் ஹன்சிகாவுடன் கேட்டார். இது எதுவும் பலன் அளிக்கவில்லை அப்போது ஹீரோக்கு மட்டும்தான் அந்த உரிமை இருக்கிறது. என்னை போன்ற காமெடியன்களுக்கெல்லாம் ஹீரோயினி தொடர் அனுமதி இல்லை என்று நான் அப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

- Advertisement -

நான் விளையாட்டுக்காக தான் பேசினேன். இதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பேசிவிட்டு ரோபோ சங்கர் சென்றார். எனினும் ரோபோ சங்கரின் பேச்சுக்கு மேடையில் இருந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது போன்ற நடிகர்களை மேடையில் இனி ஏற்ற வேண்டாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த மேடையில் ஒரே ஒரு பெண் மட்டும் தான் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் அவரை கேவலப்படுத்தும் விதமாக இப்படி பேசுகிறார்கள். ஒரு சபை நாகரிகம் கூட ரோபோ ஷங்கருக்கு தெரியவில்லை. மேடையில் இருப்பவர்கள் உணர்ந்து பேச வேண்டும் என்று மேடையில் அமர்ந்து இருந்தவர் தெரிவித்தார்.

இதன் பிறகு அந்த படத்தில் நடித்திருந்த நடிகர் ஜான் விஜய் பட குழு சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் இந்த பிரச்சனையை முடித்து வைத்தார்.

Most Popular