Friday, December 6, 2024
- Advertisement -
Homeசினிமாபிக் பாஸ் சீசன் 7-நடக்க போகும் அதிரடி மாற்றங்கள்

பிக் பாஸ் சீசன் 7-நடக்க போகும் அதிரடி மாற்றங்கள்

தமிழ், தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி போன்ற எல்லா மொழிகளிலும் பிரபலமான நிகழ்ச்சியாக வளம் வருகிறது பிக்பாஸ்.அதில் விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் உலக நாயகன் கமலஹாசன் மிக அழகாக தொகுத்து வழங்கி வருகிறார். அவர் தொகுத்து வழங்கும் விதத்திற்கே அந்நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலை இவரை 6 சீசன்களை பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக கடந்து வந்திருக்கிறது. இதில் கலந்துகொள்ளும் கண்டஸ்டன்டுகளில் யாராவது ஒருவர் தான் டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்படுகிறார்கள். ஆனால் இதில் கலந்துகொண்டாலே பிரபலம் அடைந்துவிடும் வாய்ப்பை கண்டஸ்டெண்கள் பெற்று விடுகிறார்கள் .

அது அவர்களின் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு போவதற்கு உதவியாக இருக்கிறது. மேலும் இதில் இன்னும் ஒரு சிக்கலும் உள்ளது. ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் வெற்றியை நோக்கி செல்கிறார்கள். ரசிகர்களால் விரும்பப்படாதவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறார்கள்.

- Advertisement -

இன்னும் சிலர் அந்த வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு நல்ல பெயருடன் விளங்குகிறார்கள். பின்பு பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு எடுத்துக் கொள்கிறார்கள். இது எல்லாவற்றிற்கும் தயாராக தான் இதற்குள் ஒவ்வொரு கண்டஸ்டன்டுகளும் நுழைகிறார்கள்.

- Advertisement -

கண்டஸ்டன்டுகளை பொறுத்தவரை தான் யார் என்பதை நிரூபிக்க பிக் பாஸ் வீடு ஒரு அக்னி பரிட்சையாக அமைகிறது. அதில் வருவதற்கே தனி தைரியம் வேண்டும். தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 தொடங்க இருக்கிறது. இந்நிலையில் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான உலகநாயகன் ப்ரோமோக்களில் இந்த முறை பிக் பாஸ் வீடு இரண்டாகப் போகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

பிக் பாஸ் கண்டஸ்டன்டுகள் ஓடும் சண்டையில் பொதுவாக பிக் பாஸ் வீடு ரெண்டு ஆகித்தான் போகிறது. ஆனால் இந்த முறை தனித் தனியாக இரண்டு வீடுகளில் கண்டஸ்டண்ட்களை தங்க வைக்கப் போவதாக உலகநாயகன் அறிவித்திருக்கிறார்.

இதனால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் இருந்து வருகிறார்கள். இதில் கலந்து கொள்ளப் போகும் கண்டெஸ்டெண்ட் களை பற்றிய அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் வரவில்லை, ஆனால் அவரவரும் அவரவர் இஷ்டத்திற்கு ஏற்ப ஒரு லிஸ்ட்டை தயார் செய்து இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.

அதில் தற்பொழுது பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜித் ரோபோ சங்கர் கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு 90 சதவீத வாய்ப்பு குறைவு என்றுதான் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவருக்கு விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவர் தன்னுடைய உடல் பருமனை குறைப்பதற்காக நிறைய உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தால் இவையெல்லாம் பாதிக்கப்படும் என்பதால் அவர் நிச்சயம் இதற்கு ஒத்துக் கொண்டிருக்க மாட்டார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதேபோன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் குமாரவேல் தியாகராஜன் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா போன்ற பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்

Most Popular