Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமாநரி குறவர்களை தியேட்டருக்குள் அனுமதிக்காத விவகாரம்.. விளக்கம் கொடுத்து சிக்கிய ரோகிணி திரையரங்கம்

நரி குறவர்களை தியேட்டருக்குள் அனுமதிக்காத விவகாரம்.. விளக்கம் கொடுத்து சிக்கிய ரோகிணி திரையரங்கம்

- Advertisement -

பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இதன் மூலம் சிம்பு ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ள நிலையில், அவருடைய ரசிகர்கள் பட்டாளம் மீண்டும் விரிவடைந்து வருகிறது. இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நரிக்குறவர்கள் இன்று சிம்பு படத்தை காண சென்னை ரோகிணி திரையரங்கிற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு வந்திருந்தார்கள்.

ஆனால் அவர்களிடம் உரிய டிக்கெட் இருந்தும் திரையரங்கு ஊழியர் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் ரோகிணி திரையரங்கம் ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில் பத்து தல திரைப்படம் யுஏ சான்றிதழ் என்பதால் 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பார்க்க அனுமதி இல்லை என்ற காரணத்திற்காக தான் தாங்கள் அவர்களை தியேட்டருக்குள் அனுமதிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

- Advertisement -

எனினும் இந்த விவகாரம் வேறு மாதிரியாக திசை திரும்பியதால் பிறகு அனைவரையும் உள்ளே அனுமதித்து படத்தை பார்த்ததாகவும் ரோகிணி திரையரங்கம் விளக்கம் அளித்துள்ளது. இந்த விளக்கத்திற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். யு ஏ சான்றிதழ் படத்திற்கு குழந்தைகள் பெற்றோர்களுடன் அனுமதிப்பதில் எந்த தடையும் இல்லை என்பது தான் சட்டம் என்றும் ரோகிணி  திரையரங்கம் தவறை செய்து விட்டு அதை திசை திருப்ப முயற்சி செய்வதாகவும் கடுமையாக குற்றச்சாட்டி இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் ரோகிணி திரையரங்கில் மாஸ்டர், விக்ரம் போன்ற யுஏ திரைப்படங்களுக்கு குழந்தைகள் ரோகிணி திரையரங்கில் அனுமதிக்கப்பட்டதை பல வீடியோ ஆதாரங்களுடன் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். தவறை செய்துவிட்டோம் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக அதனை வேறு மாதிரியாக திசை திருப்பி மக்களை ஏமாற்ற முயற்சி செய்வதாக ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கலை அனைவருக்கும் சமமானது நரிக்குறவ மக்களை முதலில் நீங்கள் திரையரங்குகள் அனுமதித்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Most Popular