Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாலியோவை முந்திய சலார்.. 2023ஆம் ஆண்டின் மிகப் பெரிய முதல் நாள் வசூல்

லியோவை முந்திய சலார்.. 2023ஆம் ஆண்டின் மிகப் பெரிய முதல் நாள் வசூல்

2023 ஆண்டின் இறுதியில் ரிலீஸ் ஆன மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்று தான் சலார். பாகுபலி நடிகர் பிரபாஸ் இந்த படத்தில் நடித்திருக்கிறார். மேலும் பிரித்திவிராஜ் இந்த படத்தில் பிரபாஸுடன் நடித்திருப்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

- Advertisement -

கே ஜி எஃப் திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் சலார் படத்தை இயக்கி இருந்ததால் இந்தப் படம் மீது பல மாதங்களாகவே ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படம் கே ஜி எஃப் பானியிலே எடுக்கப்பட்டு இருப்பதாகவும் ஆனால் கேஜிஎப் போல் படம் சிறப்பாக இல்லை என்றும் கலவையான விமர்சனமே வந்தது.

இதைப் போன்று கேஜிஎப் திரைப்படம் எடுத்த அதே விதத்தில் சலார் எடுத்திருப்பதால் தமிழக ரசிகர்கள் பெருமளவில் இந்த படத்தை விரும்பவில்லை. எனினும் பாகுபலி திரைப்படத்தில் நடித்ததால் பிரபாஸுக்கு வட இந்தியாவில் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

- Advertisement -

அதனால் திரைப்பட முதல் நாள் வசூல் ஹிந்தியில் மற்றும் தெலுங்கிலும் அதிகமாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி படம் இல்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இந்தியாவில் மட்டும் 95 கோடி ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதேபோன்று உலகம் முழுவதும் சலார் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 160 ப முதல் 170 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 2023 ஆம் ஆண்டில் முதல் நாள் வசூலில் நம்பர் ஒன் இடத்தை தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் பிடித்தது.

இது 147 கோடி ரூபாய் வசூலை பெற்றிருந்தது .அதன் பிறகு ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் 130 கோடி ரூபாய் வசூலை பெற்றிருந்தது. தற்போது இவ்விரண்டு படத்தின் வசூலையும் சலார் முறியடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு காரணம் ஆந்திராவில் டிக்கெட் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு இருப்பது என்று கூறப்படுகிறது.தமிழகத்தில் 120 ரூபாய் இருக்கும் முதல் நாள் டிக்கெட் விலை ஆந்திராவில் 400 ரூபாய் என்ற அளவுக்கு விற்கப்படுகிறது. எனினும் சலார் திரைப்படத்தின் கதை நன்றாக இல்லை என்று விமர்சனம் வந்திருப்பதால் இது ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தொடுவது சந்தேகமே.

Most Popular