சினிமா

” எனக்காக ஜோ மேடம் கிட்ட இத மட்டும் சொல்லிடுங்க ” நடிகர் சூர்யாவிடம் மனம் உருகி பேசிய சாய் பல்லவி

Sai Pallavi and Surya Sivakumar

கார்கி திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் நீங்கள் தான் என சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சாய் பல்லவி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ், மலையாளம, தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளின் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சாய் பல்லவி. குடும்பப்பங்கான கதாபாத்திரங்களில் நேர்த்தியாக நடிக்க கூடிய இவர், சமீபத்தில் நடித்து வெளியான கார்கி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

Advertisement

ஐஸ்வர்ய லட்சுமி, காளி வெங்கட், கவிதாலயா கிருஷ்ணன் ஜெயபிரகாஷ் சுதாகர் பிரதாப் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் எழுதி இயக்கியுள்ளார். ரவிச்சந்திரன், தாமஸ் ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் ராமச்சந்திரன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் ஆகிய இரு நிறுவனமும் வெளியிட்டு உரிமத்தை பெற்று திரையரங்குகளில் விநியோகம் செய்தது.

பாலியல் குற்றச்சாட்டை மையமாகக் கொண்டு நகரும் இந்த திரைப்படத்தின் கதை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. நேர்த்தியான கதாபாத்திரத்தில் நடிகையாக சாய் பல்லவி நடித்திருப்பதும் பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது.

Advertisement

இது குறித்து இப்படத்தினை வெளியிட்ட நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், “திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை கண்டு மகிழ்கிறேன். அழகாக எழுதப்பட்டு மற்றும் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் எங்கள் நினைவில் நீண்ட நாட்களாக இருக்கும். இத்தகைய ஆதரவை அளித்த பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்களான உங்கள் அனைவருக்கும் எனது மிகவும் பணிவான நன்றி. சாய் பல்லவி மற்றும் இயக்குனர் கௌதம் இருவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

இதற்கு பதில் அளித்திருந்த நடிகை சாய் பல்லவி, “அனைத்திற்கும் நன்றி சார். உங்களால்தான் பெரும்பாலான ரசிகர்களிடம் இந்த படத்தை கொண்டு சேர்க்க முடிந்தது. இதற்காக ஜோதிகாவிற்கும் எனது நன்றிகளை தெரிவித்து விடுங்கள்.” என பதிவிட்டு இருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top