சினிமா

அவ்வளவு பெரிய ஆளாயிட்டீங்களா? விஜய், அஜித்துக்கு நோ சொன்ன சாய் பல்லவி

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் பங்கேற்று பிறகு மலர் டீச்சர் ஆக பிரேமம் படத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து சிறு வேடங்களில் நடித்து வந்த சாய் பல்லவி. தற்போது தனி ஹீரோயினாகவே நடித்து வருகிறார்.

Advertisement

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் சாய் பல்லவி, அண்மையில் கார்கி என்ற படத்தில் நடித்து புகழ்பெற்றார். இந்த நிலையில் அனைத்து புது நடிகைகளும் விஜய் அஜித்துடன் நடிக்க வேண்டும் என்றால் பெரிய ஆசையாக இருக்கும். ஹீரோயினாக கூட அல்ல சிறு வேடம் கிடைத்தாலும் ஓகே என்று சொல்லிவிடுவார்கள்.

ஆனால் சாய்பல்லவி அஜித் விஜய் என இரண்டு பெரிய நட்சத்திரங்களுக்கும் அடுத்தடுத்து நோ சொல்லியிருப்பது சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அண்மையில் அஜித் நடித்த துணிவு திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியருக்கு பதில் முதலில் சாய் பல்லவி இடம் தான் கேட்கப்பட்டது.

Advertisement

ஆனால் கதாபாத்திரம் போதிய அளவு முக்கியத்துவம் இல்லை என்று கூறி அஜித்துக்கு சாய் பல்லவி நோ சொல்லிவிட்டாராம். இந்த நிலையில் தற்போது லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த சாய் பல்லவியிடம் கேட்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த கதையில் ஹீரோயினுக்கு எவ்வித முக்கியத்துவம் இல்லை என்று கூறி அதனை சாய் பல்லவி வேண்டாம் என்று நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தான் இனிமேல் நடித்தால் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று கரார் காட்டி வருகிறாராம். நயன்தாரா கூட ஹீரோயினாக தனி படத்தில் நடித்து வந்தாலும் அவ்வப்போது பெரிய ஹீரோவுடன் படத்தில் நடிப்பதை மிஸ் செய்வதில்லை.ஆனால் சாய்பல்லவி எடுத்திருக்க முடிவு தவறு என்று ரசிகர்கள் கூறுகின்றனர். ஒரு சிலர் அப்போது ஏன் மாரி 2 படத்தில் மட்டும் சாய் பல்லவி நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top