Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய் அஜித் படங்கள் தேவையில்லை.. நடிக்க மறுத்த சாய் பல்லவி.. காரணம் இது தான்.. !

விஜய் அஜித் படங்கள் தேவையில்லை.. நடிக்க மறுத்த சாய் பல்லவி.. காரணம் இது தான்.. !

விஜய், அஜித் போன்ற பெரிய ஸ்டார்கள் படத்தில் நடிக்க வேண்டுமென பலர் ஆசைப்படும் வேளையில் நடிகை சாய் பல்லவி அடுத்தடுத்து இரண்டு விஜய் & அஜித் படங்களில் நடிக்க மாட்டேன் என தவிர்த்துள்ளார். இது சற்று அதிர்ச்சியை உண்டாக்கினாலும் அவர் சொன்ன காரணம் ஏற்றுக் கொள்ளும் படி இருக்கிறது.

- Advertisement -

அஜித், விஜய் ஆகியோரின் படங்கள் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் படங்கள். இதில் நடித்தால் மக்கள் மத்தியில் சிறப்பான அறிமுகம் கிடைக்கும் என்பதன் காரணமாகவே அப்படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் யாரும் அவ்வளவு எளிதில் நிராகரிக்க மாட்டார்கள்.

ஆனால் சாய் பல்லவியோ அதனைக் கருத்தில் கொள்ளாமல் படத்தின் ஸ்கிரிப்ட் படி தேர்ந்தெடுத்து நடிக்கிறார். விஜய்யின் வாரிசு படத்தில் முதலில் சாய் பல்லவி தான் நடிக்கவிருந்தது. ஆனால் கதை பிடிக்காமல் போனதால் அவருக்கு பதில் ராஷ்மிக்கா நடித்தார். பிறகு மீண்டும் விஜய் படத்தில் வாய்ப்புக் கிடைத்தும் அதனை மறுத்துள்ளார்.

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் நடிக்க கேட்ட போது, ரீமேக் படத்தில் நடிக்க விருப்பமில்லை என சொல்லிவிட்டார். விஜய் படத்தைப் போலவே அஜித்தின் வலிமை படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் தவிர்துள்ளார். பின்னர் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி அந்தக் கதாப்பாத்திரத்தைச் செய்தார்.

- Advertisement -

சாய் பல்லவி இத்தனை படங்களை வேண்டாம் எனச் சொல்ல முக்கியக் காரணம், படத்தில் அவர் செய்யவுள்ள கதாபாத்திரம் வலுவாக இல்லாததால் தான் எனத் தெரியவந்துள்ளது. மர் டீச்சர் எனும் கதாபாத்திரம் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த சாய் பல்லவி மிகவும் நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

தற்போது அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அமரன் படத்தில் நடித்து வருகிறார். மேஜர் முகுந்தன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இப்படம் எடுத்துரைக்கிறது. அண்மையில் வெளியான டீஸர் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதில் சாய் பல்லவி காட்சி ஒன்று கூட இல்லை. எனினும் படத்தில் அவருக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular