Wednesday, May 1, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி விஜயின் உண்மை முகத்தை வெளிப்படுத்திய ஷாஜகான் திரைப்பட நடிகர் கிருஷ்ணா.. சக நடிகருக்கு ஏற்பட்ட...

தளபதி விஜயின் உண்மை முகத்தை வெளிப்படுத்திய ஷாஜகான் திரைப்பட நடிகர் கிருஷ்ணா.. சக நடிகருக்கு ஏற்பட்ட அவமானம்…!

2001 ஆம் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ஷாஜகான் திரைப்படம் இன்றும் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று ஆகும்.
தளபதி விஜய் வளர்ந்து வந்த நாட்களில் அவருக்கு நல்ல கதைக்களத்தை கொடுத்த திரைப்படங்களில் அதுவும் ஒன்றாகும்.

- Advertisement -

அதில் அவருடன் செகண்ட் ஹீரோவாக நடிகர் கிருஷ்ணா நடித்திருப்பார். அவருக்கு தான் கடைசியில் கதாநாயகியும் ஜோடியாவார் . தமிழில் பிரிவொன்றை சந்தித்தேன் புன்னகை தேசம் போன்ற திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் ஒரு மலையாள நடிகர் ஆவார் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் தற்பொழுது பிஹைண்ட் வுட்ஸ்க்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில் தளபதி விஜயை பற்றி அவர் கூறிய சில செய்திகள் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்கு நான் வந்திருந்தேன். அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் தளபதி விஜயின் படப்பிடிப்பு நடப்பதாகவும். அதில் விஜய் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன் அவரிடம் பேச வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது .அதற்காக முயற்சி செய்தேன்.

- Advertisement -

தளபதி விஜய் உடைய அலைபேசி எண் என்னிடமிருந்து அதை தொடர்பு கொண்டேன் ஆனால் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகு என்னுடைய மேனேஜரிடம் கூறி தளபதி விஜயின் மேனேஜருக்கு அலைபேசி மூலம் அழைத்து தகவலை தெரியப்படுத்த சொன்னேன்.

- Advertisement -

ஆனால் தளபதி விஜயின் மேனேஜர் நீங்கள் விஜய் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஷாஜகானில் இருந்த விஜய் வேறு தற்போது இருக்கும் விஜய் வேறு அதனால் அவரை இப்பொழுது நீங்கள் பார்க்க முடியாது என்று கூறிவிட்டார்.

இது என் மனதை மிகவும் பாதித்தது. என்ன இருந்தாலும் நான் விஜயுடன் இணைந்து நடித்த ஒரு நடிகராவேன்  என்னை இப்படி அவமதித்தது என் மனதை நோகடித்து விட்டது என்று உருக்கமாக பேசியிருந்தால் நடிகர் கிருஷ்ணா.

Most Popular