கே.ஜி.எஃப் திரைப்படத்தின் மூலம் பேன் இந்தியா முழுவதும் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் அறிமுக படமாக இயக்கிய உக்கரம் படத்தின் கதையை தழுவி கே.ஜி.எஃப் சாயலில் சாலார் படத்தை உருவாக்கியுள்ளார். பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதி ஹாசன், ஜபகதி பாபு, பாபி சிம்ஹா, ஶ்ரீ ரெட்டி என முக்கியப் பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்புகளைக் கொண்ட இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் இறுதியாக ஓர் சூப்பர்ஹிட் படத்தை கொடுத்ததில் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் குதிக்கின்றனர். சீஸ் பயர் எனப் பெயரிடப்பட்டுள்ள முதல் பாகம் ஃப்ளாஷ்பேக்கில் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் நட்பினை உயர்த்திக் காட்டியுள்ளது.
கிளைமாக்சில் நல்ல டிவிஸ்ட்டோடு அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்பை தூண்டி நிறைவு செய்துள்ளது. இரண்டாவது பாகத்தில் இருவர்களுக்கு இடையே நடக்கும் மோதல் தான் படமே. சுமாரான விமர்சனங்கள் பெரும் பெரிய படமே இந்த ஆண்டு 600 – 700 கோடிகள் வசூல் சாதனை புரிந்த நிலையில் சூப்பரான ஆக்க்ஷன் படம் சலார், நிச்சயம் 1000 கோடிகளை எளிதில் தொட்டுவிடும் என எதிர்பார்க்கின்றனர்.
இரு தினங்களில் 295 கோடிகளை வசூல் செய்து அதிரடியைக் காட்டியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை முடிவில் மொத்தம் 402 கோடிகள் என படக்குழுவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை என்பதால் நாளைக்குள் 500 கோடிகளை எட்டி விடும். ஏற்கனவே அட்வான்ஸ் புக்கிங்கில் நல்ல கூட்டம்.
இந்த ஆண்டு வெளியான படங்களில், நான்கு நாள் முடிவில் அதிக வசூல் செய்த படமாக சலார் முதன்மையில் உள்ளது. லியோ, ஜெயிலர் போன்ற தமிழ் படங்களை இரு தினங்களில் தட்டிக் தூக்கிவிடும். பதான், ஜவான் படங்களின் 1000 கோடிகளை முறியடிக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.சலார் படத்துடன் வெளியான ஷாரூக் கானின் டங்கி மூன்று நாளில் 285 கோடிகள் வசூகுதுள்ளது.