Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாசலார் ஒத்தி வைப்பால் லியோவுக்கு செம லக்.. விஜய்க்கு ரூட் கிளேயர்!

சலார் ஒத்தி வைப்பால் லியோவுக்கு செம லக்.. விஜய்க்கு ரூட் கிளேயர்!

தமிழ் சினிமாவில் ஜெயிலருக்கு அடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் என்றால் அது லியோ தான். தற்போது ஜெயிலர் 650 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்து தமிழ் திரைப்பட வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்பட பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் சாதனையை லியோ முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக லோகேஷ் கனகராஜ் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

இதுவரை தமிழ் திரைப்படங்கள் ஆயிரம் கோடி வசூலை நெருங்கியது இல்லை. இந்த மைல் கல்லை எட்ட வேண்டும் என்றால் ஹிந்தி, தெலுங்கு,கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் படம் வெற்றி அடைய வேண்டும்.

- Advertisement -

மேலும் பிற மொழிகளில் வசூல் சாதனை நிகழ்த்த வேண்டும் என்றால் லியோ திரைப்படம் தனியாக ரிலீஸ் ஆகவேண்டும். இந்த நிலையில் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசான நிலையில் அக்டோபர் 20ஆம் தேதி ரவி தேஜா நடித்த நாகேஸ்வரராவ் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இதனால் லியோ திரைப்படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டது. இந்த நிலையில்  செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீசாக இருந்த சலார் திரைப்படம் தற்போது நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படலாம் என செய்திகள் வெளியாகி  உள்ளது.

சலார் திரைப்படம் விடுமுறை தினத்தை மையமாக வைத்து முடிவு செய்யப்படலாம் என இருந்தது. இந்த நிலையில் சலார் திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டால் அந்த தேதியில் நாகேஸ்வரராவ் படத்தை ரிலீஸ் செய்யலாம் என பட குழு முடிவு எடுத்துள்ளது.

இதன் காரணமாக லியோ திரைப்படத்திற்கு இருந்த சிக்கல் தற்போது தேர்ந்தெடுக்கிறது. இதனால் திட்டமிட்டபடி வினோத் திரைப்படம் ஆந்திராவில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular