ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். ஜெயிலர் திரைப்படம் வெளிவந்த எல்லா மொழிகளிலுமே ஏறத்தாழ 700 கோடிக்கு மேல் வசூலை பெற்று மாபெரும் வெற்றி அடைந்தது.
ஜெய்லர் திரைப்படத்திற்கு முன்பு இவர் நடித்த சில திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியடைந்தது .அப்போது எல்லாம் சூப்பர் ஸ்டாருக்கு வயசாக்கி விட்டது. இதற்குப் பிறகு இவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் வரவேற்பை பெறாது என்று விமர்சித்து வந்தார்கள். மேலும் இதனால் அவருடைய சம்பளமும் குறைந்திருந்தது.
அந்த விமர்சனங்களை எல்லாம் தூள் தூளாக்கியது ஜெயிலர் திரைப்படம். அந்தத் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு 120 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தற்பொழுது தன் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆனால் இந்த திரைப்படத்தில் இவருக்கு மிகவும் சிறிய கதாபாத்திரம் ஆகும் .
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் அது அவருடைய படம் என்றுதான் பலரும் கூறி வருகிறார்கள். இருந்த நிலையிலும் அதில் அவருக்கு ஒரு மணி நேர காட்சிகள் தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒரு மணி நேர காட்சியில் மட்டுமே நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லால் சலாம் திரைப்படத்திற்காக லைக்கா நிறுவனம் 40 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு மணி நேர காட்சிக்கு இந்த அளவிற்கு சம்பளம் வாங்குவது சாதாரண விஷயம் இல்லை ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜெயிலர் படம் கொடுத்த வெற்றியே மீண்டும் அவரை இந்நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. இதை தொடர்ந்து அவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் இன்னும் அதிகமாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விடுவார் என்றும் கருதப்படுகிறது.