Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாசல்மான் கானை காதலிக்கும் விஜய் பட நடிகை!

சல்மான் கானை காதலிக்கும் விஜய் பட நடிகை!

- Advertisement -

நடிகர் ஜீவாவுடன் முகமூடி என்று திரைப்படத்தின் மூலம் நடிகை பூஜா ஹெச் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.  ஆனால் அப்பொழுது அவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் கொண்டாடப்படவில்லை.  நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு தளபதி விஜய் உடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து பெரும் பெயரை பெற்றார்.

தற்பொழுது இருக்கும் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராக வலம் வருகிறார்.  தெலுங்கிலும் ஹிந்தியிலும் நடித்திருக்கிறார். அதில் தற்பொழுது ஹிந்தியில் சல்மான் கான் உடன் இணைந்து ஒரு திரைப்படம் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் பெயர் கிசிக்கா பாய் கிசுகி ஜான் என்பது ஆகும்.

- Advertisement -

இந்தத் திரைப்படத்தை நடிகர் சல்மான்கான் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே சினிமா உலகில் கிசுகிசுக்கள் பரவப்படுவது மிக சாதாரணமாகும். போறப்போக்கு ரசிகர்கள் எதையாவது சொல்லி விடுவார்கள். அது அப்படியே உண்மை என்பது போல் பரவி விடுகிறது.

- Advertisement -

சிலர் வாழ்வில் அது நிஜமாகவே ஆகி இருக்கிறது அதனால் அதை நம்மால் உறுதியாக சொல்ல முடியாது.தற்பொழுது 57 வயதினுடைய சல்மா காணுடன் இளம் நடிகையான பூஜா ஹெட்ஜ் காதல் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது .இவர்கள் இருவரும் சில நாட்களாக எங்கு சென்றாலும் சேர்ந்து செல்கிறார்கள் என்றும் எப்பொழுதும் ஒன்றாகவே இருக்கிறார்கள் என்பதானாலும் இவ்வாறு கூறப்படுகிறது.

மேலும் இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தும் விதமாக சல்மான் கான் தயாரிக்க இருக்கும் தன்னுடைய அடுத்த திரைப்படத்திலும் பூஜா  கதாநாயகியாக தேர்வு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதுவெல்லாம் எப்படி இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற சந்தேகத்தை எழுப்புகிறதோ, அதே அளவிற்கு இங்கு செய்தி உண்மையா என்ற சந்தேகமும் தோன்றுகிறது. இதை அறிந்து கொள்ள இவர்களிடம் இந்த கேள்வியை கேட்டதற்கு நடிகை பூஜா ஹெச் நான் இதுவரை தனியாகத்தான் இருக்கிறேன். நான் தனியாக இருப்பது தான் எனக்கு பிடித்திருக்கிறது என்னுடைய கவனம் எல்லாம் சினிமாவில் நடிப்பதில் மட்டும்தான் உள்ளது என்று கூறி இருக்கிறார்.

Most Popular