Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமா“ புள்ளி விவரங்களின் படி இரண்டாவது திருமணம் செய்வது.. ” மறுமணம் எப்போது என்பதற்கு சமந்தா...

“ புள்ளி விவரங்களின் படி இரண்டாவது திருமணம் செய்வது.. ” மறுமணம் எப்போது என்பதற்கு சமந்தா பதில்.. !

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. பெரும்பாலாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கிறார். 36 வயதாகும் சமந்தா அக்டோபர் 2017ஆம் ஆண்டு நாகா சைதன்யாவை திருமணம் செய்துக் கொண்டார்.

- Advertisement -

இவர்கள் அவ்வப்போது ஜோடியாக ஃபோட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் காலப்போக்கில் இருவருக்கும் ஒத்துப் போகாமல் ஜூலை 2021ல் விவாகரத்து செய்து கொண்டனர். இது ரசிகர்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது.

சொந்தக் காரணங்களுக்காக இருவரும் விருப்பப்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தனர். விவாகரத்து ஆகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இத்தனை நாட்களில் சமந்தா மறுமணம், நாகா சைதன்யா அடுத்தக் காதல் என பல்வேறு வதந்திகள் வந்தன. இரு தரப்பினரும் அதனை மறுத்துவிட்டனர்.

- Advertisement -

இரண்டாவது திருமணம் குறித்த சமந்தாவே தற்போது மௌனத்தை களைத்துள்ளார். தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ என்னிடம் ஏதாவது கேளுங்கள் ’ எனப் தன் ரசிகர்களிடம் கேள்விகளைப் பெற்று அதற்க்கு விடையளிப்பதா ஸ்டோரி போஸ்ட் செய்திருந்தார். அதில் ஒருவர் “ நீங்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்வது குறித்து நினைக்கவில்லையா ? ” எனக் கேட்டிருந்தார்.

- Advertisement -

அதற்க்கு நடிகை சமந்தா புள்ளி விவரங்களை குறிப்பிட்டு பதில் சொன்னார். அவர் கூறியதாவது, “ புள்ளி விவரங்களின் படி இரண்டாவது திருமணம் செய்வது தவறான முதலீடு. ” என நகைச்சுவையாக பதிலளித்தார். அவர் குறிப்பிட்ட புள்ளி விவரங்கள் என்ஸ்வென்றால், 2023 படி முதல் திருமணம் விவாகரத்து சதவீதம் 50%. 2வது மற்றும் 3வது திருமணங்களுக்கு 67 மற்றும் 73 சதவீதம்.

இப்போதைக்கு சமந்தாவுகாக்கு இதில் விருப்பம் இல்லை எனத் தெளிவாகத் தெரிகிறது. மேலும் உடன் நிலையில் கவனம் செலுத்தி வருவதால் இதை பற்றி அவர் பரிசீலனை செய்ய விரும்பவில்லை போல.

Most Popular