Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய்க்கு வில்லியாக சமந்தாவா ? தளபதி 67 வேற லெவல் அப்டேட் !

விஜய்க்கு வில்லியாக சமந்தாவா ? தளபதி 67 வேற லெவல் அப்டேட் !

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்ட் திரைப்படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றாலும், விமர்சனம் ரீதியாக தோல்வியை தழுவியது. மேலும் அந்த திரைப்படத்தில் வரும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டது. விஜய் ஜெட் ஓட்டும் காட்சியை வைத்து உலக அளவில் பல்வேறு ரசிகர்கள் கிண்டல் அடித்தனர்.

- Advertisement -

இதனை அடுத்து விஜய் அடுத்த படத்தை வெற்றிகரமாக கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தார். வாரிசு திரைப்படம் ஏற்கனவே ஒப்பந்தமான நிலையில் தளபதி 63 படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வைத்து இயக்க விஜய் முடிவு எடுத்தார். மாஸ்டர் திரைப்படம் லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை தந்தது. கொரோனாவுக்கு பிறகு அதிக லாபம் தந்த திரைப்படம் என்ற பெருமையை மாஸ்டர் பெற்றது.

அதன் பிறகு லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் இணைந்து உருவான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுடைய பெரும் வரவேற்பை பெற்று தமிழக வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை பெற்றது. இந்த நிலையில் மீண்டும் விஜயின் லோகேஷ் கனகராஜூடன் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் தளபதி 67 படத்தின் விஜய்க்கு வில்லியாக பிரபல நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .ஏற்கனவே விஜய் ,சமந்தா ஆகியோர் இணைந்து தெறி, கத்தி போன்ற மெகா பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தனர். இந்த நிலையில், சமந்தா மீண்டும் விஜயுடன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார் .நடிகை சமந்தா ஏற்கனவே 10 எண்றதுக்குள்ள மற்றும் ஃபேமிலி மேண் போன்ற கதைகளில் வில்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் நடிகர் விஜய்க்கு தற்போது வெள்ளையாக நடிக்க உள்ளார்.

- Advertisement -

Most Popular