தமிழ் திரையுலகில் இவர் படம் எடுத்தால் இந்த படம் கட்டாயம் வெற்றி பெறும் ! என்ற பெயருடைய இயக்குனர்கள் ஒரு சிலரே உள்ளார்கள். அவ்வாறு அந்த லிஸ்ட்டை எடுத்துக் கொண்டால் அந்த லிஸ்டில் இயக்குனர் எச். வினோத் அவர்களின் பெயர் கட்டாயம் இடம் பெறும். அவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாகவே வசூல் ரீதியிலும் இந்த படங்கள் அனைத்தும் கொண்டாடப்பட்டன. இவரின் முதல் படமான சதுரங்க வேட்டை திரைப்படம் இன்றளவும் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து அவர் இயக்கிய படங்கள் அனைத்தும், அவருக்கு சிறந்த இயக்குனர் என்று பெயரை பெற்றுக் கொடுத்தது.
இந்த நிலையில் நடிகர் அஜித் குமாரை வைத்து துணிவு என்ற படத்தை இயக்கினார் இயக்குனர் எச். வினோத்.இந்த படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியானது. அதே நேரத்தில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் வெளியானதால்,யாருடைய படம் அதிக நாட்கள் திரையரங்கில் ஓடும் மற்றும் யாருடைய படம் அதிக வசூலை செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிகம் காணப்பட்டது.
இரண்டு படங்களும் விமர்சனம் ரீதியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் துணிவு படம் எப்பொழுதும் வாரிசை விட ஒரு படி மேலே உள்ளது என்பதை நடிகர் சமுத்திரக்கனி ட்விட்டரில் பதிவிட்ட பதிவின் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
துணிவு திரைப்படம் வெளியாகி இன்றோடு 100 நாட்கள் கடந்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருப்பதாக சமுத்திரகனி வெளியிட்ட பதிவின் மூலம் அவர் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகமடைந்துள்ளார்கள். ஏனெனில் தற்போதைய காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படமானது ஓரிரு வாரங்கள் அந்த திரையரங்குகளில் ஓடுவதே அரிதான செயலாக பார்க்கப்படுகிறது அந்த நிலையில் இவர் இவ்வாறு பதிவு செய்திருப்பது ரசிகர்களையும், தமிழ் திரையுலகையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சமுத்திரகனி இவ்வாறு பதிவு செய்ய காரணம் என்ன? என்று பார்க்கையில் துணிவு படத்தில் சமுத்திரகனி காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.அந்த கதாபாத்திரமும் அவருக்கு சிறப்பானதாக உருவாக்கப்பட்டிருந்தது.அவரும் அவருடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.