Thursday, March 28, 2024
- Advertisement -
Homeசினிமாதெலுங்கு சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி

தெலுங்கு சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி

- Advertisement -

கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் நடிகருமான சமுத்திரக்கனியின் இயக்கி நடித்த வினோதய சித்தம் என்ற திரைப்படம் ஒடிடியில் வெளியானது. இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் தம்பி ராமையா மற்றும் நடிகர் சமுத்திரக்கனியின் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் கடந்த பிக் பாஸ் 6 உடைய பிரபலம் செரினா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2021 கொரோனா காலகட்டம் என்பதால் இந்த திரைப்படம் நேரடியாக அக்டோபர் 13ஆம் தேதி ஜீ பைவில் வெளியானது. இந்த திரைப்படத்தில் நேரத்திற்கு உருவம் இருந்தால் அது எப்படி இருக்க என்பதை மிக அழகான கற்பனையை  நகைச்சுவையாக காட்டியிருந்தார் இயக்குனர் சமுத்திரக்கனி. இந்த திரைப்படத்திற்கு கோடிட்ட இடங்களை நிரப்புக ,வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த எஸ் சத்யா இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு இருந்ததால் தற்பொழுது இந்த திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்று இருக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி .
தமிழில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் தற்பொழுது இயக்குனர் சமுத்திரக்கனி தெலுங்கில் இயக்க இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை முக்கிய கதாபாத்திரங்களாக தெலுங்கு சினிமாவின் உச்ச  நடிகர்களில் ஒருவரான நடிகர் பவன் கல்யாண் மற்றும் சாய் தரன் தேஜ் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பு இன்று தொடங்க இருக்கிறது.

- Advertisement -

இந்தத் திரைப்படம் தற்பொழுது ஹைதராபாத்தில் எடுக்கப்பட இருக்கிறது. நடிகர் பவன் கல்யாண் நடித்த விமலா நாயக் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது.  நடிகர் பவன் கல்யாண் எப்போதும் ஆப்ஷன் காட்சிகளை மையமாக வைத்து படத்தில் நடிப்பார் தற்போது முதல் முறையாக கதை அம்சத்தை இந்த ஆக்ஷன் காட்சிகளும் இல்லாத கதையை தேர்ந்தெடுத்து நடிப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது மேலும் இது பவன் கல்யாண் ரசிகர்களுக்கு பிடிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Popular