Wednesday, May 1, 2024
- Advertisement -
Homeசினிமாசங்கீதாக்கும், விஜய்க்கும் மோதலா? ஒரே சம்பவத்தால் சுக்கு நூறாக உடைந்த வதந்தி

சங்கீதாக்கும், விஜய்க்கும் மோதலா? ஒரே சம்பவத்தால் சுக்கு நூறாக உடைந்த வதந்தி

நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா குறித்து பல வதந்திகள் கிளம்பின. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஜோடி திருமண பந்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதாகவும், இதனால் விஜயின் பின்பு சங்கீதா லண்டன் சென்று விட்டதாகவும் பல புரளிகள் கிளம்பின. மேலும் நடிகர் விஜய் மற்ற நடிகைகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் இதனால்தான் சங்கீதா சென்றுவிட்டதாகவும் பல செய்திகள் வெளிவந்தது.

ஆனால் இது குறித்து விஜய் தரப்பும், சங்கீதா தரப்பும் எவ்வித விளக்கமும் தரவில்லை. சங்கீதாவும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். காரணம் அவர் லண்டன் சென்றதாக கூறப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் மாவீரன் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்ப்பதற்காக நடிகை சங்கீதா இன்று திடீரென்று திரையரங்குக்கு வந்திருந்தார்.

- Advertisement -

நடிகை சங்கீதாவை பார்த்தவுடன் பலரும் ஆச்சரியம் அடைந்தனர். ஏனென்றால் கொரோனா காலத்திற்கு முன்புதான் கடைசியாக சங்கீதா வெளியே வந்திருந்தார். அதன் பிறகு அவர் ஒரு முறை கூட இந்த நிகழ்ச்சிக்கும் வரவில்லை.

இந்த நிலையில் மாவீரன் படத்திற்கு சங்கீதா வந்திருந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதில் முக்கியமான சம்பவமே நடிகை சங்கீதா தளபதி விஜயின் காரில் தான் வந்து இறங்கினார்.

இதன் மூலம் சங்கீதாவுக்கும் விஜய்க்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெள்ளத்தெளிவாகிவிட்டது. மேலும் இருவரும் வெவ்வேறு வீட்டில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஒரே வீட்டில் இருப்பதும் இந்த சம்பவம் மூலம் தெரியவந்துள்ளது.

  விஜய் குடும்பத்தினரும் சங்கீதாவுடன் வந்திருந்தார்கள். இந்தப் புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் தற்போது அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.விஜய் சங்கீதா வைத்து பரப்பப்பட்ட விஷயங்களுக்கு இந்த ஒரு புகைப்படம் முற்றுப்புள்ளி வைத்து விட்டதாகவும் விரைவில் விஜயும் சங்கீதாவும் இணைந்து எடுத்துக் கொள்ளப்படும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வரும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Most Popular