சினிமா

அடேங்கப்பா ! தளபதி 67 படத்தில் நடிக்க உறுதியாகியுள்ள‍ 3 ஜாம்பவான் நடிகர்கள் இவங்களா ! லேட்டஸ்ட் அப்டேட் !

Thalapathy Vijay and Sanjay Dutt

விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் லோகேஷ் கனகராஜ் தன் அடுத்த படத்தின் வேலைகளில் தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் சமூக வலைதளங்களில் இருந்து சற்று ஓய்வும் பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக தளபதி விஜய்யை வைத்து இயக்கவிருக்கும் படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் அப்டேட்டை எண்ணி விஜய் ரசிகர்கள் பல நாட்களாக காத்திருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் எங்கு சென்றாலும் தளபதி 67 பட அறிவிப்பைக் கேட்டு தொந்தரவு செய்யும் ரசிகர்களிடம், “ தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் தயவு செய்து காத்திருங்கள். ” என பட்டென்றுக் கூறி நடையைக் காட்டினார் லோகேஷ் கனகராஜ்.

இருப்பினும் அவ்வப்போது செய்திகள் பரவிக் கொண்டே இருந்தன. தளபதி 67 திரைப்படம் முற்றிலும் கேங்ஸ்டர் ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாகவும் அதில் எந்த ஒரு பாட்டும் இடம்பெறாது என்றும் செய்திகள் கசிந்தன. அது மட்டுமில்லாமல் 13 ஆண்டுகள் பிறகு த்ரிஷா – விஜய் காம்போ, 4 – 5 மிகப் பெரிய நடிகர்கள் விஜய்க்கு எதிராக வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்றெல்லாம் இணையதளத்தில் பேசிக் கொண்டனர். இதில் பாதிக்கு பாதி உண்மையாக மாறவுள்ளது.

தளபதி 67 படத்தில் நடிக்கும் ஜாம்பவான் நடிகர்கள்

தளபதி விஜய்க்கு எதிராக நடிக்க இப்போது வரை மூன்று நட்சத்திர நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தில் அதிரடி காட்டிய சஞ்சய் டுத் தளபதி 67 படத்தில் நடிக்க கையசைத்துள்ளார். அதற்காக அவர் 10 கோடி ரூபாய் ஊதியம் பெறுகிறார்.

அடுத்ததாக மலையாள ஜாம்பவான் பிரித்விராஜ். இவரின் கதாப்பாத்திரம் குறித்த படக்குழு ஏற்கனவே எல்லாம் பேசிவிட்டது. படத்தில் நடிக்க பிரித்விராஜும் ஒப்புக் கொண்டனர், இன்னும் ஒப்பந்தப் பாத்திரத்தில் கையெழுத்திடுவது மட்டும் தான் பாக்கி.

தமிழ் திரையுலக ரசிகர்களை தன் காதல் காவியாத்தால் ஈர்த்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்பட்டியலில் கடைசியாக இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே தன்னிடம் விக்ரம் படத்திற்காக அணுகியதாகவும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அது நடக்கவில்லை என சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் வருத்தம் தெரிவித்தார். அதனால் அவரின் அடுத்த படத்தில் நடிக்க கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டதாக கூறினார்.

வில்லன்களுக்கு ஏற்றவாறு படத்தின் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்று கூறியுள்ளனர். 13 ஆண்டுகளுக்குப் பிறகு தளபதி விஜய்யுடன் த்ரிஷா இணையவுள்ளார். அதற்கான ஒப்பந்த வேலைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top