இந்திய சினிமாவில் தற்போது நம்பர் ஒன் வில்லன் நடிகராக விளங்கி வருபவர் நடிகர் சஞ்சய் தத். கே ஜி எஃப் திரைப்படத்தில் ஆதிராவாக நடித்து ரசிகர்களை மிரட்டி இருந்தார். சஞ்சய்தத் நடிப்பதன் மூலம் ஹிந்தியில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்பதால் பல்வேறு படங்களிலும் சஞ்சய் தத்தை வில்லனாக இயக்குனர்கள் போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் லியோ திரைப்படத்திலும் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சஞ்சய் தத் படத்தின் கதையை கேட்ட உடனே தமக்கு பிடித்து விட்டதாகவும் இந்த படத்தில் கண்டிப்பாக நாம் நடிக்க வேண்டும் என்பதற்காகவே ஒப்புக் கொண்டதாகவும் கூறினார். தற்போது காஷ்மீரில் பட குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் லியோ படத்திற்கு தயாராகும் விதமாக சஞ்சய் தத் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஜிம்மில் பயிற்சி செய்து வருவது போல் சஞ்சய் தத் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பார்ப்பதற்கு படு மாசாக இருக்கும் சஞ்சய் தத் நான் தயாராகி விட்டேன் என்பதை கூறும் வகையில் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சஞ்சய் தத் எப்போது காஷ்மீர் செல்வார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் காஷ்மீர் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் அதன் பிறகு சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று லியோ படம் தொடர்பான ஏதேனும் அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் தேதியை ஏற்கனவே படக்குழுவினர் வெளியிட்டு விட்டார்கள். பொதுவாக விஜய் படத்தின் பெயரை அவரது பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர்கள் வெளியிட்டு வந்தனர். தற்போதும் படத்தின் பெயர் தொடர்பான அப்டேட் முன்கூட்டியே வந்துவிட்டது. இதனால் வேறு என்ன அப்டேட்ஸ்கள் கொடுக்க முடியும் என தயாரிப்பு நிறுவனம் முழித்துக் கொண்டு வருகிறது. இதனால் விஜயின் ஏதேனும் ஸ்டில்ஸ் உள்ளிட்டவர்களை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வெளியிட பட குழு திட்டமிட்டுள்ளது.