Monday, October 7, 2024
- Advertisement -
Homeசினிமாகூட இருந்தவர்கள் கைவிட்டாலும் கோஸ்ட் கைவிட வில்லை!!!.. ஒன்றுக்கு இரண்டாக ரிட்டர்ன்ஸை அள்ளித் தந்த DD-Returns

கூட இருந்தவர்கள் கைவிட்டாலும் கோஸ்ட் கைவிட வில்லை!!!.. ஒன்றுக்கு இரண்டாக ரிட்டர்ன்ஸை அள்ளித் தந்த DD-Returns

சின்னத்திரையில் அறிமுகமாகி அனைவரையும் தன் நகைச்சுவையால் ஈர்த்தவர் நடிகர் சந்தானம். லொள்ளுசபா என்ற நிகழ்ச்சி யில்  முதல் முதலில் அறிமுகமாகி தன் சகாக்களுடன் அவர் செய்யும் குறும்புத்தனமான நகைச்சுவை அனைவருக்கும் பிடித்தது.

- Advertisement -

கலாய்ப்பது என்பதின் மறு பெயர் சந்தானம் என்று மாறியது.
அதிலும் அவரும் மனோகரும் கைகளை ஆட்டி பேசும் நகைச்சுவை பார்க்கும் பொழுது குழந்தைகள் மகிழ்ச்சியில் குதிப்பார்கள்.அதன் பின்பு நடிகர் சிம்பு சந்தானத்தை தன் மன்மதன் படத்தில் வெள்ளித்திரையில் அறிமுகம் செய்தார்.

அதன் பிறகு சந்தானத்தின் நகைச்சுவை பல படங்களில் இடம்பெற்றது. நடிகர்களின் நண்பன் என்னால் அது சந்தானமாகவே இருக்கும்.சந்தானம் இணைந்து நடித்தாலே அந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று முன்னணி நடிகர்கள் கூட நம்பினார்கள்.

- Advertisement -

அதிலும் ஆர்யா, உதயநிதி, ஜீவா போன்ற நாயகர்களுக்கு பக்க பலமாக இருந்து கதையை நகர்த்துவதற்கு சந்தானத்தின் காமெடி காட்சிகள் உதவியாக இருந்தன என்றால் அது மிகையாகாது.அந்தந்த நடிகர்கள் கூட வெளிப்படையாகவே மேடைகளில் பேசுவார்கள்.

- Advertisement -

அந்த அளவுக்கு சந்தானத்தின் புகழ் மென்மேலும் வளர்ந்து கொண்டிருந்தது.இவ்வாறாக சென்று கொண்டிருந்த சந்தானத்தின் சினிமா பாதையில், உனக்குள் ஒரு மிருகம் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று கூடயிருந்தவர்கள் சந்தானத்தை உசுப்பேத்த கதாநாயகனாக தன்னை மாற்றிக்கொண்டார் சந்தானம்.

அதன் பின்பு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு ,ஏ ஒன் ,பிஸ்கோத்து, டிக்கிலோனா என்று அவருடைய படங்கள் வெளிவந்த போதும் ரசிகர்களால் பழைய சந்தானத்தை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.திரையில் சந்தானம் தோன்றினாலே உற்சாகமடையும் ரசிகர்களை கதாநாயகனாக நடித்தும் அவரால் திருப்தி படுத்த முடியவில்லை.

இதனை முன்னணி நடிகர்கள் கூட சந்தானத்திற்கு மறைமுகமாக மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். இதில் சிம்புவும் ஒருவர்.
ஆனால் சந்தானம் இதிலிருந்து பின் வாங்குவதாக தெரிய வில்லை.

இந்நிலையில் தான் நடித்த படங்களில் ஓரளவுக்கு வெற்றியைப் பெற்று தந்த தில்லுக்கு துட்டு படத்தை மூன்றாவது பாகமாக திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் சந்தானம்..இது டி டி ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நன்கு வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது.

குழந்தைகளை கவரும் வகையில் பேயுடன் கேம் விளையாடுவது போன்ற திரைக்கதையை மிகவும் திரில்லாக சொல்லி வெற்றி அடைந்திருக்கிறது பட குழு.
டி டி ரிட்டன்ஸ் என்றால் என்ன அர்த்தம் டிமான்ட் டிராஃப்டா? என்ற நிருபரின் நக்கலான கேள்விக்கு, ஏன் டிரங்க் அன்ட் டிரைவ் என்று கூட வைத்துக் கொள்ளலாம் என்று தனக்கே உரிய பாணியில் பதில் அளித்து இருந்தார் சந்தானம்.

. படத்தில் லொள்ளு சபா டி மீன் டச்சு நிறைந்திருப்பதாக கூறி 2K கிட்ஸ்களுக்கு மட்டுமல்ல 90 கிட்ஸுகளுக்கும் ஒரு சேர ஆவலைக் கிளப்பி இருக்கிறார்கள்.படம் வெளியான மூன்றே நாட்களில் எட்டு கோடிக்கும் மேல் வசூலித்த செய்தியை கேட்டு வம்பு இழுத்த வாய்கள் எல்லாம் வாயடைத்து போய் உள்ளன.டிடி ரிட்டன்ஸ் ஐ போல் சந்தானம் தன் பழைய ஃபார்முக்கு ரிட்டர்ன் ஆனால் இரட்டிப்பு  மகிழ்ச்சி என்கின்றனர் நகைச்சுவை ரசிகர்கள்.

Most Popular