சினிமா

சார்பட்டா 2 படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளரா‌ ? இல்லையா ? – விளக்கம் கொடுத்துள்ள‌ ச.நா.. !

Santhosh Narayanan Sarpatta Parambarai 2

2021ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி, ஜி.எம்.சுந்தர், கலையரசன், ஜான் கொக்கின், ஷபீர் மற்றும் சில நட்சத்திரங்களின் சிறப்பான நடிப்பாற்றலின் மூலம் உருவாகிய திரைப்படம் சார்பட்டா பரம்பரை. 1970களில் வட சென்னையில் சார்பட்டா பரம்பரை மற்றும் இடியாப்ப பரம்பரை இடையே நடக்கும் குத்துச்சண்டை மற்றும் அதிலிருக்கும் அரசியல் பற்றியான படம் இது.

கபிலன், வேம்புலி, டான்சிங் ரேஸ், ரங்கன் வாத்தியார், டாடி என அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நிற்கும் அளவிற்கு நடிப்பாற்றலும் இயக்கமும் இருக்கும். அது தான் படத்தின் மிகப் பெரிய பிளஸ். ஒரே குறை எனக் குறிப்பிட்டால் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிய ஒன்றே ! இப்படம் நிச்சயம் தியேட்டர் மெட்டீரியல்.

Advertisement

கோலிவுட் ரசிகர்கள் வட சென்னை 2ஆம் பாகத்திற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் சர்ப்ரைஸாக பா.ரஞ்சித் ‘ சார்பட்டா 2 ’ படத்தின் அறிவிப்பை கொடுத்து அனைவரையும் குஷியில் துள்ளி குதிக்க வைத்தார். சமூக வலைதளங்களில் “ கபிலன் இஸ் பேக் ” மிகவும் ட்ரெண்டாக பரவியது. இந்த வெளியீட்டில் ரசிகர்களுக்கு சிறிய ஷாக்.

சினிமா விமர்சகர்கள் உட்பட பலர், சார்பட்டா 2 படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணனுக்குப் பதிலாக ஜி.வி.பிரகாஷ் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் பரப்பினர்ம் பா.ரஞ்சித் வெளியிட்ட அறிவிப்பில் ஜி.வி.பிரகாஷ் கமண்ட் செய்ததை ஓர் குறிப்பாகவும் எடுத்துக் கொண்டனர். மேலும் பல ஆண்டுகளாக சந்தோஷ் நாராயணனுடன் ஜோடி சேர்ந்து படங்கள் செய்த பா.ரஞ்சித் தன் கடைசி படமான நட்சத்திரம் நகர்கிறது படத்தில் இசைக்கு தெம்மாவை அழைத்தார்.

Advertisement

ஆனால் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சந்தோஷ் நாராயணன் நேற்று இரவு தன் டிவிட்டர் பக்கத்தில் ரஞ்சித்தின் போஸ்ட்டை ஷேர் செய்து “ வானம் விடிஞ்சிருச்சு காசு டா மேளத்தை !! ” எனக் குறிப்பிட்டிருந்தார். ஷாக்கில் கிடந்த ரசிகர்களும் மீண்டும் உற்சாக நிலைக்குத் திரும்பினர்.

சார்பட்டா திரைப்படத்தில் நடிப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் போல இசையும் பாடல்களும் தரமாக அமைந்தது. குறிப்பாக காசுடா மேளத்தை மற்றும் நீயே ஒளி பாடல். சூப்பரான ஃபார்மில் இருக்கும் சந்தோஷ் நாராயணன் இரண்டாம் பாகத்திலும் பிச்சு உதருவார் என ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்க்கின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top