Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாவர்லாம்..வர்லாம் வா பைக் மியூசிக் நியாபகம் இருக்கா? தலக்கு அப்படி ஒரு தீம் மியூசிக் ரெடி...

வர்லாம்..வர்லாம் வா பைக் மியூசிக் நியாபகம் இருக்கா? தலக்கு அப்படி ஒரு தீம் மியூசிக் ரெடி !

- Advertisement -

தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது தல 62 படத்தில் இருந்து பல கலைஞர்கள் மாற்றப்பட்டு இருக்கும் சம்பவம் தான். யாரும் எதிர்பாராத வகையில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் புதிய இயக்குனராக மகிழ் திருமேனி இணைய உள்ளார் என்று நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த நிலையில் அஜித்துக்கு பல ஹீட்டுகளை கொடுத்த இசையமைப்பாளர் அனிருத்தும் ஏகே 62 வில் இருந்து விலகி உள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு பதில் யார் இசையமைப்பார் என பல வதந்திகள் வெளிவந்தன. இதில் யுவன் சங்கர் ராஜா மீண்டும் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கபாலி, காலா, பைரவா போன்ற ஹிட் ஆல்பங்களை கொடுத்த சந்தோஷ் நாராயணன் அஜித்திற்கு முதல்முறையாக இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். சந்தோஷ் நாராயணன் ஏற்கனவே பைரவா படத்திற்கு பைக் சவுண்டை வைத்து ஒரு தீம் மியூசிக் கொடுத்திருப்பார். அது அப்போதே அஜித்துக்கு இது போன்ற ஒரு தீம் மியூசிக் கொடுத்தால் சரியாக பொருந்தும் என ரசிகர்கள் கருதினர். ஏனென்றால் அஜித் ஒரு பைக் ரேசர். இதனால் அதேபோன்று ஒரு தீம் மியூசிக்கை அஜித்துக்கு கொடுத்து மாஸ் காட்ட தகுதியான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மட்டும்தான்.

- Advertisement -

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாம் நடிகர் அஜித்தை விமான நிலையத்தில் சந்தித்ததாகவும் அப்போது நாங்கள் இருவரும் பேசிக்கொண்டபோது நான் ஒரு இசையமைப்பாளர் என்றும் காலா, கபாலி படங்களுக்கு இசையமைத்தேன் என்று நடிகர் அஜித்திடம் அறிமுகமானேன் என்றும், அதற்கு உங்கள் பாடல்களை கேட்டு இருக்கேன். மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் என்று அஜித் பாராட்டியதாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.தற்போது ரஜினி விஜயை தொடர்ந்து அஜித்துக்கும் இசையமைக்கும் வாய்ப்பு சந்தோஷ் நாராயணனுக்கு கிடைத்திருக்கிறது.

Most Popular