இசைக்கு பல வடிவங்கள் இருக்கிறது. அதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு இசையமைப்பாளர் கை தேர்ந்தெடுப்பார். ஆனால் ராக் மியூசிக்கில் இருந்து கானா வரை தான் கைவைத்தது அனைத்தும் ஹிட்டாகி இருக்கிறது என்றால் அது சந்தோஷ் நாராயணனுக்கு தான்.
அட்டகத்தி, மெட்ராஸ் எனத் தொடங்கி காலா கபாலி கர்ணன் பைரவா என மிகப் பெரிய ஸ்டார்களுக்கு சந்தோஷ நாராயணன் இசை அமைத்திருக்கிறார். மேலும் சந்தோஷ் நாராயணன் கானா பாட்டு இருக்கும் மிகவும் பிரபலமானவர். பாரிஸ் ஜெயராஜ் படத்தில் அவர் இயக்கிய கானா பாடல்கள் இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்காதவை இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனது ஆரம்ப காலம் குறித்து சந்தோஷ் நாராயணன் பேசியிருக்கிறார்.
அதில் 2006 ஆம் ஆண்டு சென்னை வந்தேன் அப்போது கையில் காசு இருக்காது. இருந்தாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. எப்போதுமே நண்பர்கள் வீட்டில் எனக்கு சாப்பாடு கிடைத்துவிடும். பிரதீப் என்ற நண்பன் வீட்டில் சாப்பிடுவேன்.
அதன் பிறகு வேறொரு நண்பர் வீட்டில் சாப்பிடுவேன். அப்போதெல்லாம் கையில் 2000 ரூபாய் இருந்தால் கூட வாழ்ந்து விட முடியும். பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த வாழ்க்கைக்கும் தற்போதுக்கும் நல்ல மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. நான் மியூசிக் ப்ரோக்ராமாக ஆயிரம் படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறேன்.
அதில் எனக்கு நிறைய வாய்ப்புகள் வரும். ஆனால் எதுவுமே படத்திற்கு இசையமைக்கும் வரை போகாது. இந்த நிலையில் தான் ரஞ்சித்தின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அப்போது அவர் உன்னோடு பணியாற்ற எனக்கு இஷ்டமில்லை. தயாரிப்பாளர் கூறுகிறார் என்று தான் நான் இங்கு வந்தேன்.
உனது பாடல் பிடித்திருந்தால் மட்டுமே உங்களுடன் பணியாற்றுவேன் என்று வெளிப்படையாக கூறினார். ரஞ்சித்தின் பேச்சு எனக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு கானா பாடல் குறித்து ரஞ்சித்திடம் தான் கேட்டு அறிந்தேன். சினிமாவில் பார்க்கும் பாடல் வேறு, நிஜத்தில் பார்க்கும் கானா பாடல் வேறு என்று அப்போதுதான் புரிந்து கொண்டேன்
ரஞ்சித் என்னை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று கானா பாடல் குறித்து தெரியப்படுத்தினார். அதன் பிறகு நான் அட்டகத்தி படத்திற்காக ஆடி போனா ஆவணி என்ற பாடலை என் குரலில் பாடி ரஞ்சித்துக்கு அனுப்பினேன்.
அவர் எனது குரல் கேவலமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு கானா பாலா குரலில் இந்த பாடலை நாங்கள் எடுத்தோம். அது ரஞ்சித்துக்கு மிகவும் பிடித்து விட்டது என்று சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.