சினிமா

அப்பாடா ஒருவழியா அண்ணாச்சி ஒத்துகிட்டார்… ! லெஜன்ட் ஓடிடி ரிலீஸ் எதில் எப்போது அறிவிப்பு !

The Legend movie OTT release

சென்ற ஆண்டு ஜூலை மாதம் முதல் வாரத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தானே தயாரித்து நடித்த ‘ தி லெஜன்ட் ’ படத்தை வெளியிட்டார். முதலில் தன் வியாபாரத்திற்காக விளம்பரப் படங்களில் முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்ததை இணையத்தில் பயங்கரமாக கலாய்ததனர். இருப்பினும் தன் சொந்த விருப்பத்தில் சினிமா துறைக்குள் களம் பத்தித்தார்.

முதல் படத்திற்கு ‘ தி லெஜன்ட் ’ எனும் தன் கடையின் பெயரையே வைத்துவிட்டார். ஜே.டி – ஜெர்ரி இணைந்து இப்படத்தை எழுதி இயக்கினர். நாயகன் சரவணன் அண்ணாச்சி படத்தில் விஞ்ஞானயாக வலம் வருகிறார். தன் சொந்த ஊரில் சர்க்கரை நோயால் பரிதவிக்கும் மக்களுக்காக வில்லன்கள் குரூப்பை எதிர்த்து மருந்து கண்டு பிடிக்கிறார். இடையில் வரும் தடைகளை படமாக்கியுள்ளனர்.

Advertisement

சில வருடங்களாக வாய்ப்புக் கிடைக்காமல் உட்கார்திருந்த ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். எப்போதும் கையில் எடுக்கும் ஆல்பத்தின் அனைத்து பாடல்களையும் ஹிட் கொடுப்பதில் வல்லவர் இவர். இம்முறையும் அதைச் சிறப்பாகச் செய்து கம்பேக்கை அறிவித்தார்.

தி லெஜன்ட் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி லாபத்தை ஈட்டியதாக செய்திகள் வந்தன. இது ஒரு பக்கம் இருப்பினும் மறுபக்கம் விமர்சன ரீதியாக அண்ணாச்சிக்கு நடிக்க வரவில்லை என பல விதங்களில் கேலி செய்து தள்ளினர். அந்த வாரம் இணையத்தின் விளையாட்டு பொருளாக அவர் திகழ்ந்தார். இத்தகு கலாய்களை தாண்டி ஓடிடி ரிலீசுக்கு வந்தால் மேலும் கேலி செய்வார் என அவர் உணர்ந்து படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடவில்லையா என ஒன்றும் தெரியவில்லை.

Advertisement

லெஜன்ட் படத்தின் ஓடிடி ரீலீஸ் எப்போது எப்போது என பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். தற்போது திடீரென புத்தாண்டு சர்ப்ரைஸாக அண்ணாச்சி விரைவில் ஓடிடி ரீலீஸ் ஆகும் என பதிவிட்டுள்ளார். ரசிகர்களின் ஏக்கம் முடிவுக்கு வரப் போகிறது. இந்த மாத இறுதிக்குள் எதேனும் ஓர் ஓடிடி தளத்தில் குறிப்பாக, ஹாட்ஸ்டாரில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளன.

TOP STORIES

To Top