தமிழ் சினிமாவில் பல்வேறு காலங்களில் பல இயக்குனர்கள் புது மாற்றத்தை ஏற்படுத்திருக்கிறார்கள். பாலச்சந்தர், பாரதிராஜா, ஸ்ரீதர், பாக்கியராஜ், மணிரத்தினம் போன்ற பல்வேறு இயக்குனர்கள் புதிய வகை சினிமாவை ரசிகர்களுக்கு காண்பித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் 2000 க்கு பிறகு ஒரே மாதிரியாக வெளிவந்த தமிழ் படங்களுக்கு மத்தியில் குறிஞ்சு பூவாக பூத்த படம் தான் சுப்பிரமணியபுரம்.
ஒட்டு மொத்த இந்தியாவையே திரும்பி பார்க்கும் அளவுக்கு இந்த படம் எடுக்கப்பட்டது.பாலிவுட் இயக்குனர் அனுராக் கஸ்யாப், சுப்ரமணியபுரம் படம் தான் எனக்கு மிகவும் பிடித்த தமிழ் படம் என கூறியிருக்கிறார். அதேபோன்று 2010 ஆம் ஆண்டு ஈசன் என்ற திரைப்படத்திலும் சசிகுமார் இயக்கி இருக்கிறார். என்ன காரணம் என்று தெரியவில்லை கடந்த 13 ஆண்டுகளாக அவர் இயக்குனர் என்ற அவதாரத்தை எடுக்கவில்லை.
சசிகுமார் நடித்த படங்கள் நன்றாக ஓடியதால் ஹீரோவாகவே நடிக்க தொடங்கினார். இந்த நிலையில் கடந்த சில படங்களாக சசிகுமார் தொடர்ந்து தோல்வியை கொடுத்து வந்தார். எனினும் கடைசியில் வெளியான அயோத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் மீண்டும் 13 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்படுவதாக இயக்குனர் அவதாரத்தை சசிகுமார் எடுத்திருக்கிறார்.
இந்த படத்தை ஹிந்தி மற்றும் தமிழில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்து இருக்கிறார் சசிகுமார். இந்தப் படத்தில் ஹீரோ பாலிவுட் இயக்குனர் தான் என்பது கூடுதல் தகவல். இந்தப் படம் பண்டைய காலத்தில் நடைபெறும் ஆக்சன் திரைக்கதை கொண்ட திரைப்படம் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஜூன் மாதம் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகுமாரின் இந்த அவதாரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.