Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாஇதெல்லாம் என்ன மாதிரி வருத்தம்.. ஞானவேல் ராஜாவை 5 கேள்விகள் மூலம் சரமாரியாக தாக்கிய சசிகுமார்

இதெல்லாம் என்ன மாதிரி வருத்தம்.. ஞானவேல் ராஜாவை 5 கேள்விகள் மூலம் சரமாரியாக தாக்கிய சசிகுமார்

தற்போது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரச்சினை ஞானவேல் ராஜா – அமீர் உடையது. அனைத்திற்கும் தொடக்கப்புள்ளி கார்த்தியின் 25வது திரைப்படமான ஜப்பான் நிகழ்ச்சி தான். தமிழ் சினிமாவில் கார்த்திக்கு தரமான அறிமுகம் கொடுத்த இயக்குனர் அமீரை நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என அமீரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

- Advertisement -

அதற்க்கு அவர், “ என்னை யாரும் கூப்பிடவில்லை, நானும் போகவில்லை ” என சிம்பிளான பதில் கொடுத்துவிட்டு நகர்ந்தார். சூர்யா குடும்பத்திற்கும் அமீருக்கும் பல ஆண்டுகள் சிக்கல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அண்மையில் பருத்திவீரன் படத்தை தயாரித்த ஞானவேல் ராஜா இயக்குனர் ஆமீர் இப்படத்தில் கோடிக் கணக்கில் பணத்தை மோசடி செய்துவிட்டார் என குற்றம் சாட்டினார்.

தன் நண்பரின் மேல் பொய்யான குற்றம் சுமத்தப்பட்டதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சமுத்திரகனியும் சசிகுமாரும் தங்கக் தரப்பு நியாயத்தை விளக்கினார்கள். உண்மையில் பருத்திவீரன் படத்தில் நடந்தது என்னவென்றால், ஷூட்டிங் இடையே பட்ஜெட் சிக்கலால் சூர்யா அமீரிடம் படத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என பாதியிலேயே கைவிட்டு விட்டார்.

- Advertisement -

கார்த்தியின் சினிமா வாழ்கையை மனதில் கொண்டும் சிவகுமாரின் வார்தைகளுக்ககவும் கடன் வாங்கி அமீர் இப்படத்தை முடித்தார். படம் நன்றாக வந்ததை தொடர்ந்து நாங்களே ரீலீஸ் செய்கிறோம் என ஸ்டுடியோ கிரீன் கடைசி நேரத்தில் முன்வந்தனர். மேலும் காசு செலவு செய்த அமீறுக்கு வரும் லாபத்தில் பங்கீடு தருவதாக ஒப்புதல் கொடுத்தனர். ஆனால் இதுவரை அப்பணத்தை கொடுக்காமல் இன்னும் கோர்ட் கேஸ் என அமீர் அலைந்துக் கொண்டுள்ளார்.

- Advertisement -

பருத்திவீரன் படத்தில் நடித்தவர்கள் உட்பட பல சினிமா நட்சத்திரங்கள் இயக்குனர் ஆமீர் பக்கம் நிற்கின்றார். இன்று ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஓர் அறிக்கை விட்டுள்ளார். “ பருத்திவீரன் பட சிக்கல் 17 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. என்றைக்கும் நான் அமீர் அண்ணா என மரியாதையாக தான் அவரை அழைப்பேன். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் என் மேல் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டு என்னை காயப்படுதியது. அதற்க்கு பதில் அளிக்கும் வகையில் என் வார்த்தைகள் அவரைப் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

இதற்கு சசிகுமார் அவர்கள் அடுத்தடுத்து ஐந்து கேள்விகள் எழுப்பியுள்ளார். “ அமீர் அண்ணன் கூறிய பொய்யான குற்றச்சாட்டு என்ன ? அமீர் அண்ணன் வருத்தப்படும் வகையில் ஞானவேல் ராஜா பயன்படுத்திய சில வார்த்தைகள் என்ன ? திட்டமிட்டு அவமானப்படுத்திவிட்டு வருத்தம் தெரிவிப்பது என்ன மாதிரியான வருத்தம் ? இதன் மூலம் ஞானவேல் ராஜா கூறுவது என்ன ? பெயரிடப்படாத இந்தப் கடிதம் யாருக்கு ” என சரமாரியாக தாக்கியுள்ளார் சசிகுமார் அவர்கள்.

Most Popular