Sunday, May 19, 2024
- Advertisement -
Homeசினிமாநாளுக்கு நாள் சரிவை சந்திக்கும் லால் சலாம் வசூல்..!

நாளுக்கு நாள் சரிவை சந்திக்கும் லால் சலாம் வசூல்..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த 9ஆம் தேதி வெளியிடப்பட்ட லால் சலாம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பின்னடைந்திருக்கிறது.

- Advertisement -

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரம் என்றி ஒரு மணி நேர காட்சியில் நடித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதனால் இந்த திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் என்றே பெயர் பெற்றுவிட்டது.

இதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம்  ஒட்டுமொத்தமாக 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை பெற்று சாதனை படைத்தது.இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை ஏனென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்கள் இந்த அளவிற்கு வசூலை பெறுவது ஒன்றும் புதிது இல்லை ஆனால் தற்பொழுது வெளியாகி இருக்கு லால் சலாம் திரைப்படம் தான் உண்மையான ஆச்சரியத்தை நமக்கு தந்திருக்கிறது.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் வெளியாகி இரண்டு நாட்களில் இதுவரை வெறும் 6 கோடி ரூபாய் மட்டுமே வசூல் ஆகி இருக்கிறது முதல் நாள் 4.3 கோடியும் இரண்டாவது நாள் 3கோடியும் வசூலை பெற்றிருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

- Advertisement -

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் இசை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிறப்பு கதாபாத்திரம் , கிரிக்கெட் பின்னணியான கதை என்று எல்லா சிறப்பம்சங்களும் இருந்தும் கூட இந்தத் திரைப்படம் வெற்றிவாகை சூட எந்த அடையாளமும் இதுவரை தெரியவில்லை.

இந்த கதை தொடங்கப்பட்ட நாட்களில் இருந்து திரைப்படத்திற்கான இடையூறுகளும் தொடங்கிவிட்டது. இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசிய பின்பு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இதனுடைய விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைக்க தொடங்கி விட்டார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களாவது இந்நிலைக் கருதி கரம் கொடுத்தால்  சில மாற்றங்கள் நிகழலாம் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.

Most Popular