Friday, November 22, 2024
- Advertisement -
HomeUncategorizedஇலங்கை பிரதமர் சீமான் காட்சி நீக்கம்.. அடியே டீசரில் நிகழ்ந்த மாற்றம்

இலங்கை பிரதமர் சீமான் காட்சி நீக்கம்.. அடியே டீசரில் நிகழ்ந்த மாற்றம்

தமிழ் சினிமாவில் தற்போது எல்லாம் புதிய புதிய கதைக்களத்தில் திரைப்படங்கள் வருகிறது ஹாலிவுட் படத்தில் மட்டுமே பார்க்கப்பட்ட டைம் டிராவல் படங்கள் எல்லாம் தற்போது தமிழில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நேற்று இன்று நாளை 24 ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து டைம் லூப் கான்செப்டில் மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் ஹாலிவுட்டில் தற்போது வெகுவாக பேசப்பட்டு வரும் மல்டிவர்ஸ் என்ற கதைக்களம் தற்போது தமிழிலும் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது நம் உலகம் மாதிரி பல உலகங்கள் இருப்பதாகவும் அங்கு ஒவ்வொன்றும் வேறு மாதிரி நடக்கும் என்பதை கதையின் கான்செப்ட் ஆகும்.

- Advertisement -

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கும் அடியே என்ற படத்தின் டீசர் இதே கதைகளை வைத்து தான் வெளியானது. இந்தப் படத்தை திட்டம் இரண்டு இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்க  உள்ளார்.  இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

இந்த டீசரில் விஜயகாந்த் இந்திய பிரதமராக மாறுவது போலவும், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் மன்சூர் அலி கான் என்பது போலவும் சிஎஸ்கே அணியின் கேப்டன் கேதர் ஜாதவ் என்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சீமானை இலங்கை அதிபர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர் சீமானை எப்படி இலங்கை அதிபர் என்று குறிப்பிடலாம் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். இதனை அடுத்து அந்தக் காட்சி நீக்கப்பட்டு அதற்கு பதில் தமிழ் ஈழம் பிறந்ததாகவும் அது பொருளாதாரத்தில் மேம்பட்டு சிங்கப்பூரில் மிஞ்சியதாகவும் செய்தி வெளியாகுவது போல் காட்சி மாற்றப்பட்டு இருக்கிறது.

அதற்கு கீழ் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்தை இந்த அரசியல்வாதிக்கும் அஞ்சாமல் சொல்லும் வகையில் கருத்து சுதந்திர மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதாக பட குழுவினர் மாற்றி இருக்கிறார்கள். இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Most Popular