சினிமா

நடன பயிற்சி மேற்கொள்ளும் செல்வராகவன் ! பகாசூரன், நானே வருவேன் குறித்து வெளியான அப்டேட்

Selvaraghavan Pagasooran

தமிழ் சினிமாவில் சர்ச்சை கருத்துக்களை படத்தில் காட்டி, அதன் மூலம் எழும் விளம்பரத்தால் வசூலை ஈட்டி வெற்றி இயக்குனராக வலம் வருபவர் மோகன் ஜி. அவர் எடுத்த பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி ,ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது பகாசுரன் என்ற படத்தை எடுத்து வருகிறார். இதில் பிரபல இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்திற்காக பாடல் ஒன்றில் செல்வராகவன் ஆடுவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. திரைக்கதை எழுதுவதிலும் , காட்சிகளை அமைப்பதிலும், நடிப்பை சொல்லித் தருவதிலும் செல்வராகவனைப் பற்றி தமிழ் சினிமாவுக்கே தெரியும். ஆனால் நடனம் அவருக்கு சரியாக வராதது என்பதால் தற்போது நடனப் பயிற்சியில் செல்வராகவன் இறங்கியுள்ளார்.

Advertisement

பகாசுரன் படத்திற்காக சிவன் பாடலில் ஆடுவது போல் செல்வராகவன் காட்சி இடம்பெற்றிருக்கும் என சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன . சாம் இந்த படத்திற்கு இசை அமைத்து வருகிறார். பகாசூரன் படத்தின் வில்லனாக கர்ணன் படத்தில் நடித்த நடராஜன் இதிலும் நடிக்கிறார் . இதனிடையே தனுஷை வைத்து நடிகர் இயக்குனர் செல்வராகவன் உருவாக்கியுள்ள படம் “நானே வருவேன்” இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது .

படத்திற்கான டீசரையும் படக்குழு எடிட் செய்து தயாராக வைத்துள்ளது. எனினும் நானே வருவேன் படத்திற்கான டப்பிங் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதிலும் கவனம் செலுத்தி வரும் இயக்குனர் செல்வராகவன் தனது போஷனின் டப்பிங் பணியை முடித்து விட்டதாக தெரிகிறது. நானே வருவேன் திரைப்பட ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது வரும் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வரும் என தெரிகிறது. அதே தினம் பொன்னியின் செல்வன் திரைப்படமும் வெளியாகிறது .பெரும் பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் எடுக்கப்பட்டுள்ளதால் நானே வருவேன் திரைப்படம் தள்ளி போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top