தமிழ் சினிமாவில் கேரமல் கலாச்சாரம் பெருகிவிட்டதால் அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களை கூட ஹீரோக்கள் பார்ப்பதில்லை என்று நடிகர் தேவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.கயல், தேன் ,சண்டக்கோழி 2, சீறு, இவன் தந்திரன் போன்ற திரைப்படங்களின் நடித்தவர் தேவராஜ்.
இவர் சினிமாவில் அப்போதிலிருந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த நிலையில் 1998 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் ஒன்றை நடிகர் தேவராஜ் நினைவுகூர்ந்துள்ளார்.
அதில், சென்னை அடையாறு எம்.ஜி.ஆர் பிலிம்சிட்டியில், ஒரு புளோரில் விஜய் நடிக்கும் நிலவே வா ஷுட்டிங் நடந்தது. அப்போது வேறொரு புளோரில் பிரபு நடித்த ‘மனம் விரும்புதே உன்னை’ ஷூட்டிங் நடந்தது. நான் விஜய்யைப் பார்க்கச்சென்றிருந்தபோது, வேறொரு ஷுட்டிங்கில் பிரபு இருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரைப் பார்க்கச் சென்றேன்.
அப்போது பிரபுவிடம், விஜய் ஷுட்டிங் பற்றி சொன்னேன். உடனே அவர், நிலாவே வா’ ஷூட்டிங்கிற்கு வந்தார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோவில் நான், மறைந்த நகைச்சுவைச் செல்வர் எஸ்.எஸ்.சந்திரன், நடிகர்கள் சஞ்சீவ், தாடி பாலாஜி போன்றோர் இருக்கிறோம்.
இன்று கேரவன் கலாசாரம் பெருகிவிட்டது. ஒரே ஷூட்டிங்கில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கூட ஒருவரிடம் ஒருவர் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. அவ்வளவு அநாகரீகம் வளர்ந்து விட்டது.
பிரபு ஒரு சீனியர் நடிகர், தன்னைவிட வயது குறைந்த விஜய்யைப் பார்க்க வந்திருந்த அவரது பண்பு, உண்மையிலேயே போற்றுதலுக்குரியது என்று அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் நடிகர் தேவராஜ் யாரை குற்றம் சாட்டுகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விஜய், பிரபு ஆகியோரின் சம்பவத்தை இவர் பதிவேற்றுள்ளதால் இது விஜய் பற்றிய பதிவா என்று ரசிகர்கள் சந்தேகத்து வருகின்றனர்.
எனினும் விஜய் கேரவனுக்குள் ஷூட்டிங் நடக்கும் போது செல்லமாட்டார் என்று அவர்களுடன் நடிக்கும் பல கலைஞர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதனால் இது வேறு ஏதேனும் நடிகரை குறை கூறுவதற்காக இருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.