Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாஇந்தியன் 2 படத்தில் 7 வில்லன்கள்.. ! யார் யார் தெரியுமா.. ?

இந்தியன் 2 படத்தில் 7 வில்லன்கள்.. ! யார் யார் தெரியுமா.. ?

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தலைமையில் ஜெயமோகன் எழுத்தில் கமல் ஹாசன் ஹீரோவாக நடிக்கும் படம் இந்தியன் 2. முதல் பாகம் வந்து சுமார் 27 வருடங்கள் கழித்து பார்ட் 2 வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

- Advertisement -

2 ஆண்டுகளுக்கு முன் பிப்ரவரி மாதம் க்ரேன் விபத்தில் நின்ற படப்பிடிப்பு பல சிக்கல்களுக்குப் பின் மீண்டும் துவங்கி உள்ளது. இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 & ஆர்.சி.15 படப்பிடிப்பில் மாறி மாறி தீவிரமாக செயல்படுகிறார். இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்குள் படத்தை வெளியிட லைகா நிறுவனம் தீவிரமாக உள்ளது. ஒரு பண்டிகையில் இந்தியன் 2 மற்றொன்றில் அஜித் 62, இதுதான் அவர்களது பிளான்.

திருப்பதியில் ஷூட்டிங் முடிந்து தற்போது படக்குழு அடுத்த 30 நாட்கள் சென்னையில் பெரிய செட் அனைத்து பணிபுரிய இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் தனுஷ்கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. பிரம்மாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் இப்படத்திலும் பல கோடிகள் செலவுட்டு பிரம்மாண்டமாக உருவாக்குகிறார்.

- Advertisement -

இந்தியன் 2 படத்தைப் பற்றிய ருசிகர செய்தி கசிந்துள்ளது. தரமான ஆக்க்ஷன் காட்சிகள் கொண்டு தயாராகும் இப்படத்தில் 7 வில்லன்கள் இருக்கிறார்கள். சமுத்திரகனி, பாபி சிம்ஹா, ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், மாரிமுத்து, வெண்ணிலா கிஷோர், சிவாஜி குருவாயூர் ஆகியோர் கமல் ஹாசனுக்கு எதிராக மோதவுள்ளனர். லியோ படத்தைப் போலவே இதுவும் பல வில்லன்கள் கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

விக்ரம் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் பெரிய கம்பேக் கொடுத்த கமல் ஹாசன் மீண்டும் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். விக்ரமைத் தொடர்ந்து இதுவும் மிகப் பெரிய பிராஜெக்ட் தான். 2.0 திரைப்படம் என்ன தான் 900 கோடிகள் சம்பாதித்திருந்தாலும் விமர்சன ரீதியாக ஷங்கருக்கு அடி தான். அதை இந்தியன் 2 படத்தில் ஈடுகட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular