சினிமா

நயன்தாராவின் இரட்டைக் குழந்தைகளைக் காண நேரடியாக சென்ற ஷாரூக் கான்.. ! ரசிகர்கள் சுற்றி வளைப்பு.. !

Sharukh Khan Nayanthara babies

பாலிவுட்டி பாட்ஷா பல ஆண்டுகளுக்குப் பின் பதான் படம் மூலம் திரை உலகிற்கு கம்பேக் கொடுத்தார். ஷாருக் கான் கண் அசைத்தாலே உற்சாகமடையும் கூட்டம் அவர் நடித்த ஆக்க்ஷன் த்ரில்லரை சும்மாவா விடுவார்கள், கொண்டாடித் தீர்த்து வசூலை 1000 கோடிக்கு தூக்கிவிட்டனர்.

தற்போது அவரது கையில் 2 படங்கள் உள்ளன. ஒன்று இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியின் டுன்கி, மற்றொன்று அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் ஜாவான். இப்படத்திற்கு தான் பெரிய பெரிய எதிர்பார்ப்பு. தமிழில் 4 பிளாக்பஸ்ட்டர்களை கொடுத்த அட்லீ முதல் முறையாக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். மேலும் முதல் படத்திலேயே ஷாருக் கனையும் இயக்குகிறார்.

Advertisement

அட்லீயைப் போலவே படத்தின் நடிக்கும் கதாநாயகியான நயன்தாராவுக்கும் பாலிவுட்டில் இது முதல் படம். ஜாவான் ஷூட்டிங்கின் போது தான் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிகளுக்கு திருமணம் ஆனது. குறைந்த விருந்தாளிகள் கொண்ட அந்நிகழ்ச்சியில் ஷாரூக் காணும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

பிறகு சில மாதங்களுக்கு முன்னர் இந்த தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. 2 நாட்களுக்கு முன் அந்த அழகான 2 குழந்தைகளைக் காண நடிகர் ஷாரூக் கான் எக்மோரில் இருக்கும் நயன்தாராவின் அடுக்குமாடிக்கு நேரடியாக செந்துள்ளார். ஹாட்டான ஹீரோவை ரசிகர்கள் சுற்று வளைத்தனர். பின்னர் குழந்தைகளைப் பார்த்து மீண்டும் தன் வாழ்தைத் தெரிவித்து விட்டு கிளம்பினார் அவர்.

Advertisement

ஜவான் படத்தின் அறிவிப்பு சென்ற ஜூன் மாதம் ஒரு சிறிய புரோமோ மூலம் வெளியானது. படக்குழு தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகிறது. படத்தில் நடிகர் விஜய் சிறப்புக் காட்சி கொடுப்பதாகவும் கூறுகின்றனர். இந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் படம் உலகெங்கும் வெளியாகிறது. விரைவில் படக்குழு மற்ற அனைத்து வேலைகளையும் நிறைவு செய்து அடுத்தடுத்து அப்டேட்களைக் குவிக்க உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top