2023ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிகச் சிறந்த வருடமாக போய்க் கொண்டிருக்கிறது. பிரம்மாண்ட படங்களை விட இளம் இயக்குனர்கள் மற்றும் பெரிய சலசலப்பு இல்லாமல் வரும் படங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிருது. தாதா, குட் நைட், போர் தொழில் வரிசையில் சித்தா எனும் படமும் இணைகிறது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், ஆகிய படங்களை இயக்கிய எஸ்.யூ.அருண்குமார் தான் இந்த சித்தா படத்தையும் இயக்கியுள்ளார். சித்தார்த் தானே நடித்தும் தயாரித்தும் இருக்கிறார். இது தவிர படத்தில் முக்கியமாக நிமிஷா, அஞ்சலி நாயர் மற்றும் இரு குழந்தைகள் வருகின்றனர். இவர்களைச் சுற்றியே படம் நடைபெறுகிறது.
படத்தின் மிகப் பெரிய பலமே மிகவும் எதார்த்தமாக உண்மையில் நடப்பது போலவே எழுதியிருப்பது தான். அப்பா இல்லாமல் சிதப்பாவுடன் மிகவும் நெருக்கமாக வளரும் ஓர் குழந்தை கடதப்படுகிறது. அந்தக் குழந்தையை கடத்தியவன் தன் காம வெறியினை அந்தப் பிஞ்சின் மேல் காட்டுகிறான். ஒரு பக்கம் குற்றவாளி குழந்தையை கொள்ள முயற்சிக்க மற்றொரு பக்கம் காணாமல் போன பிள்ளையை தேடி பெற்றோர் அலைகின்றனர்.
இந்தப் போரில் அவர்கள் எப்படி வெல்கிறார்கள் என்பது தான் கதை. குழந்தை விஷயத்தில் சில டிவிஸ்டகளும் இடம்பெறுகின்றன. இரண்டாம் பாகத்தின் முடிவில் இரு காட்சிகள் அனைவரது விசில்களையும் கைதட்டல்களையும் சம்பாதிக்கிறது. அந்தத் தருணத்தில் இது 2023ஆம் ஆண்டு சிறந்தப் படமாக முன்னேறுகிறது.
இதே பாணியில் கடந்த ஆண்டு சாய் பல்லவி நடித்த படம் கார்கி. அந்தத் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றத. உண்மையில் சொல்லப் போனால் கார்கி பார்க்கும்போது இருந்த இதயத் துடிப்பை விட சித்தா அதிகம் கொடுத்து. அதற்கு முக்கிய காரணமாக இருந்த சித்தார்த்தின் நடிப்பு பல பாராட்டுகளைப் பெறும். கமல்ஹாசன் சொன்னது போல நல்ல படங்களுக்கு என்றும் வரவேற்பு கிடைக்கும். சித்தா படத்தை மிஸ் செய்யாமல் பார்ப்பது சிறந்த முடிவுகளில் ஒன்றாக இருக்கும்.