Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசினிமாஉங்க காதல் வாழ்க்கை என்ன ஆச்சு? சித்தார்த்திடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்.. என்ன பதில் வந்தது...

உங்க காதல் வாழ்க்கை என்ன ஆச்சு? சித்தார்த்திடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்.. என்ன பதில் வந்தது தெரியுமா?

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரு காலத்தில் பிஸியாக நடித்து வந்தவர் நடிகர் சித்தார்த். பார்ப்பதற்கு கல்லூரி இளைஞர் போல் இருக்கும் நடிகர் சித்தார்த்துக்கு எவ்வளவு வயதாகிவிட்டது என்பதை கண்டுபிடிக்கவே முடியாது.

- Advertisement -

அந்த அளவுக்கு இளமையின் தோற்றமாகவே அவர் இருப்பார். தற்போது சித்தார்த் டக்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த பட தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் ஜூன் ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆகிறது.

- Advertisement -

இந்த நிலையில் சித்தார்த் 2003 ஆம் ஆண்டு மேக்னா என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் நான்கு ஆண்டுகளில் அவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். இதை அடுத்து நடிகை சுருதிஹாசனுடன் சித்தார்த் குடும்பம் நடத்துவதாக செய்திகள் வெளியானது .

- Advertisement -

ஆனால் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். இதை அடுத்து காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் ஆகிய திரைப்படத்தில் நடித்த அதித்தியுடன் நடிகர் சித்தார்த் தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.

இருவரும் ஒன்றாக பல இடத்திற்கு சுற்றிய நிலையில் தற்போது அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் டக்கர் பட செய்தியாளர்கள் சந்திப்பின்போது நிருபர் ஒருவர் உங்களுடைய படத்தில் காதல் காட்சிகள் வெற்றிகரமாக வருகிறது.

ஆனால் உங்களுடைய சொந்த வாழ்க்கையில் ஏன் காதல் தோல்வி அடைகிறது என கேட்டார். இதில் கடுப்பான சித்தார்த் நாம் இருக்கும் நிகழ்ச்சிக்கும் நீங்கள் கேட்ட கேள்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நீங்கள் கேள்வி கேட்டு விட்டீர்கள். இருந்தாலும் பரவாயில்லை மற்றவர்களுக்கு இது பற்றி தெரிய வேண்டாம். நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் உங்களிடம் தனியாக பேசுகிறேன்.

ஆனால் என் காதல் வாழ்க்கை என் தோல்வி அடைந்தது என்பது குறித்து நான் ஒரு முறை கூட யோசித்தது கிடையாது. தூக்கத்திலும் யோசித்ததில்லை. என் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போதும் யோசித்தது அல்ல என்று அவர் கூறினார். சித்தார்த்திடம் இந்த கேள்வி கேட்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

Most Popular