Tuesday, October 15, 2024
- Advertisement -
Homeசினிமாகேரள ஸ்டோரியில் நடித்த சிம்பு நடிகை.. எதிர்ப்பு கிளம்பியதால் விளக்கம்

கேரள ஸ்டோரியில் நடித்த சிம்பு நடிகை.. எதிர்ப்பு கிளம்பியதால் விளக்கம்

நாட்டில் தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் கேரளா ஸ்டோரி. கேரளாவில் வாழும் மற்ற மத பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளாக மாற்றுவதாக இந்த படம் கூறியது.

- Advertisement -

முதலில் 32 ஆயிரம் பெண்கள் மாற்றப்பட்டதாக படம் விமர்சித்த நிலையில்,  அது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அதற்குப் போதிய ஆதாரம் இல்லை என்று உண்மையை ஒப்புக்கொண்ட பட குழு அதனை மூன்றாக மாற்றிவிட்டது.

- Advertisement -

இந்த நிலையில் கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு அனைத்து ஊடகங்களும் மோசமான விமர்சனங்களே வழங்கி இருக்கிறது. மேலும் பொய் பிரச்சாரம் மற்றும் வெறுப்புணர்வை விதைக்கும் விதமாக படம் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

- Advertisement -

இதனை ஒட்டுமொத்த தமிழக மக்களும் நிராகரித்ததன் காரணமாக கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் பல்வேறு அமைப்பினர்களும் இந்த படத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் தற்போது தமிழகத்தில் இன்று முதல் இந்த படத்தை வெளியிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்களும் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் சிம்பு நடிகை ஆன சித்து இத்னானி நடித்திருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இது போன்ற படத்தில் நடித்ததற்கான காரணம் என்ன என்பது குறித்தும் அவர்கள் விமர்சித்தனர். மேலும் உங்களின் படத்தை இனி புறக்கணிக்க போவதாகவும் இணையதளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த எதிர்ப்பின் காரணமாக தற்போது விளக்கம் அளித்துள்ள சித்து இத்னானி எந்த மதத்திற்கு எதிராகவும் எந்த வெறுப்புணர்வையும் நான் ஊக்குவிப்பதில்லை என்றும் கேரளா ஸ்டோரி எந்த மதத்திற்கு எதிரான படமும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிரான படம் என்பதால் தான் இந்த படத்தின் நடித்ததாகவும் அவர் விளக்கம் கூறியுள்ளார். எனது நடிப்பில் உங்களை திருப்திப்படுத்தி இருப்பேன் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Most Popular